ASTROLOGER , G. PARTHIBAN
CONTACT NUMBER: 9941220631, 8610578792
E MAIL ID: Parthig27@gmail.com
ASTROLOGER , G. PARTHIBAN
CONTACT NUMBER: 9941220631, 8610578792
E MAIL ID: Parthig27@gmail.com
உங்களுக்கு சூழல் ஒத்துவராது போனால் சூழலை மாற்றுங்கள். அதாவது புது சூழலுக்குள் சென்று விடுங்கள்.சூழலை குறை கூறிக் கொண்டே இருக்காதீர்கள். ஏனெனில் உங்களுக்கு தற்போது இருப்பதற்கு களம் தந்ததே அந்த சூழல்தான்.அதை பழிப்பதால் உங்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது.இரண்டே வழிதான்.ஒன்று ஏற்றுக் கொள்ளுதல்.மற்றொன்று ஒதுங்கிக் கொள்வது.ஏனெனில் உங்களுக்கு சூழலை அமைக்கும் தகுதி வந்தால் இந்த சிக்கலே வராது. அது வராததால் மட்டுமே இந்த குழப்பம்.இப்போது கூட வழி இரண்டுதான்சரியான சூழலை தேர்ந்தெடுப்பதுஅல்லது உங்களுக்கான சூழலை வடித்தெடுப்பது.புரிந்து கொள்ளுங்கள். புரிதல் இன்மை தான் இதற்கெல்லாம் காரணம். உங்களை சுற்றி உள்ள யாரும் உங்களை கவனிப்பதே இல்லை. நீங்கள்தான் அவர்கள் குடும்பமாக சேர்ந்து உங்களை பற்றி மட்டுமே சோறு தண்ணி கூட இல்லாமல் பார்த்துக் கொண்டே இருப்பது போல் நினைத்து உங்களை நீங்களே மேலும் புதைகுழியில் ஆழத்திற்கு அமிழ்த்து விடுகிறீர்கள்.புரிந்து கொள்ளுங்கள். அது போதும். எல்லாம் சரியாகிவிடும். காரணம் உங்கள் பிரச்சினை உங்களாலேயே உருவானது. அதை நீங்கள் புரிந்து கொண்டால் தவிர சரியாகாது.ஒரு பாத்திரத்தில் உள்ள ஓட்டைகள் எல்லாம் சேர்ந்து அந்த பாத்திரத்தில் நீர் பிடித்து நிரப்புவது போல நீங்கள் செயல்பட்டுவிட்டு பாத்திரத்தின் மீதும், நீரின் மீதும் குறை கூறாதீர்கள். நீங்கள் ஓட்டையாக இருக்கும் வரை அந்த பாத்திரத்தை கூட சேர்த்துக் கெடுத்து விடுவீர்கள்.எனவே நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். போதும்.உங்கள் அன்பு ஜோதிடன் ராஜநாடி கா பா
திடீரென வாழ்க்கையை புரட்டிப்போட்ட கதைகளை நீங்கள் அதிகமாக கேள்விப்பட்டு இருப்பீர்கள், ஏன் உங்கள் வாழ்க்கையில் கூட அது நடந்திருக்கும்.
ஒதுக்குப்புறமான கிராமத்தில் ஓரமாக இருந்த ஒரு நபர் திடீரென காலத்தில் அடித்து செல்லப்பட்டு மளமளவென வளர்ச்சி அடைந்து விடுவார், அப்படி ஒரு மாற்றம் அவருக்கே கூட வியப்பாக இருக்கும்,
எப்படி மாறியது வாழ்க்கை என்பது யாராலும் உணர முடியாது, பலர் அவரைப் போல மாற வேண்டும் என்று முயன்றாலும் அது நடக்காது.
ஏனெனில் அந்த மாற்றம் அவராக ஏற்படுத்தியது கிடையாது, இன்னும் கூட சொல்லப் போனால் அது போல திட்டம் போட்டு ஏற்படுத்தவும் முடியாது.
சில சமயங்களில் இது எதிர்பதமாக நடந்துவிடுவது கூட உண்டு. யானை கட்டி போரடித்து ஊருக்கே சோறு போட்ட குடும்பம் ஒரே தலைமுறையில் தரையில் வீழ்ந்து விடுவதையும் பார்க்கிறோம்.
இது போல எதிர்பாராத ஏற்றமோ அல்லது இறக்கமோ நடப்பதற்கு காரணம் இயற்கை மட்டுமே. ஆனால் அதை தெரிந்து கொள்ள ஜோதிடம் இருக்கிறதே. ஆம் ஜாதகத்தில் எந்த ஒரு கிரகம் வக்ரமானாலோ அல்லது பரிவர்த்தனை அடைந்திருந்தாலோ இது போல வாழ்க்கையை திடீரென மாற்றிவிடும் .
உடனே அருணாசலம் ரஜினிக்கு வந்த முவ்வாயிரம் கோடியை நினைத்து கணவு காணாதீர்கள் .
பரிவர்த்தனை அடைந்த கிரகம் என்ன என்பது முக்கியம் . வக்ரமடைந்தது என்ன என்பது முக்கியம்.
சிறிய உதாரணமாக சொல்கிறேன் என்ன லக்னமானாலும. என்ன ராசியானாலும். என்ன தசா இருப்பு மற்றும் நடப்பானாலும் உச்சமடைந்தாலும், நீச்சமானாலும். பாவர் சேர்க்கை பெற்றாலும், லக்னத்துக்கு பாவியானாலும், அஸ்தங்கமானாலும், அவயோகியானாலும், பகை வீட்டில் அமர்ந்தாலும் என்ன எப்படி ஆனாலும் அதை பார்க்கவே தேவையில்லை புதன் வக்ரமானால் ஒன்றை படிக்கப்போய் காரணமே தெரியாமல் தடையாகி வேறு ஒன்றில் செல்வது. ஒன்றை படித்துவிட்டு அதற்கு தொடர்பு இல்லாத கல்வியையும் தேடி படிப்பது . இரு வேறு கல்வியில் மாறுவது போல கல்வியில் திடீரென மாற்றத்தை அவ்வப்போது குடுக்கும்.
பரிவர்த்தனை மற்றும் வக்ரமான கிரகங்கள் எவ்வளவு மெதுவான கிரகங்களோ அந்த அளவுக்கு திடீரென மாற்றத்தை ஒரு முறையாவது உண்டாக்கும்.
ஒவ்வொரு கிரகத்தின் வக்ரமும் ஒவ்வொரு விசயங்களை திருப்பி போடும் .
எந்தெந்த கிரகங்கள் பரிவர்த்தனை அடைந்ததோ அந்த தன்மையில் நிகழ்வுகளை நடத்தும்.
வேவ்வேறு பரிவர்த்தனைகளுக்கு 162 தன்மையில் வெவ்வேறு பலன்கள் நடக்கும் .
என்ன மாதிரியான மாற்றம் நடக்கும் . அது எப்போது நடக்கும் என்று தெரிந்து கொள்ள #ராஜநாடி சோதிடர்களை அனுகவும்.
உங்கள் அன்பு ஜோதிடன் ஜோதிட ஸ்ரீ கா பா.
ஜோதிடம் என்பது உங்களுக்கு ஒரு கலங்கரை விளக்கம் போன்றது.
கலங்கரை விளக்கம் எப்போதும் சூரியன் ஆகாது என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் அன்பு ஜோதிடன் ராஜநாடி கா பா
ஒருவர் வேதனையில் இருக்கும் போது அவர் மனம் அடையும் நரக வேதனை, எதையும் செய்ய வழியில்லாமல் கூண்டுக்குள் அடைபட்ட விலங்கு போல நகர முடியாத அந்த அழுத்தம். பெரிய பாறாங்கல் நம்மீது கிடக்கும் போது அதை தூக்கி தூக்கி கைகள் சோர்ந்து போய் இறுதியில் கையை தூக்கும் அளவுக்கு கூட சக்தி இல்லாத இயலாமை. செய்வதெல்லாம் செய்தாகி விட்டது. இனி எதுவும் செய்ய வழியும் இல்லை. கைகால் உடல் அனைத்தும் வாத நோயால் பீடிக்கப்பட்டு நினைவு மட்டுமே எஞ்சிய நிலையில் மனம் படும் வேதனை. எவரையும் நிமிர்ந்து பார்க்கக்கூட திரானியை இழந்துவிட்டு இந்த உயிர் கூட பாரமாகிப் போன வேதனை. ஆற்றாமை யின் ஆக உயரத்திற்கு சென்றுவிட்ட வெறுப்பு. இதையெல்லாம் உங்களுக்குள்ளும் உணர முடியும் என்றால் நீங்கள் சிறந்த ஜோதிடர்.நீங்கள் உங்களிடம் ஆலோசனை பெற வந்தவரின் ஒட்டு மொத்த வேதனையின் அனுபவத்தை புரிந்து கொள்ள வேண்டும். அதே போல் அவரின் மனதின் குதூகலத்தின் ஆர்பரிப்பையும் புரிந்து கொள்ள வேண்டும்.எதையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதிகமான ஆழத்தில் இருந்து அதை அதுவாகவே மாறி உணரும் திறன் இருக்க வேண்டும்.இருமை என்பதே பார்வையாளனின் நிலைதான். பார்க்கும் பொருளாகவே மாறிவிடும் போது அங்கு ஒருமை பிறக்கிறது. அங்கு தனியாக எதுவும் இல்லை. அவரின் ஒவ்வொரு உணர்வுமாக நாம் மாறிவிட வேண்டும்.சோதிடம் என்பது தெய்வீக கலை என்பது இதுதான். நீங்கள் உங்கள் சோதிட நிலையத்தில் வைத்துள்ள போட்டோக்களின் எண்ணிக்கை. உங்கள் விளம்பரத்தில் போடும் சாமி படத்திலும் தெய்வீகம் இல்லை.வாழ்க வையகம் என்று கூறும் போது பக்கத்து வீட்டுக்காரன் மீது வெறுப்புடன் இருப்பதால் பயனில்லை.ஒருவனுக்கு தெரிந்த எல்லைதான் அவனது வையகம். அந்த வையகத்தில் வந்து செல்லும் உறவுகள். சுற்றத்தினர். நண்பர்கள் சோத்தை சாமர்த்தியமாக அபகரித்து விட்டு வாழ்க வளமுடன் கூறிப் பயனில்லை. தெய்வீகம் என்பது உதடுகளை சார்ந்ததல்ல உள்ளத்தை சார்ந்தது.நீங்கள் ஜாதகத்தை கண்களை மூடி விட்டு இதயத்தை திறந்து பார்க்க வேண்டும்.தெய்வாக்கியாள் என்பது தெய்வத்தின் நகல் சோதிடர்கள் அப்படி இருக்க வேண்டும் என்றால் தெய்வங்கள் அனிந்த உடையும் அலங்கரித்த அடையாளங்களாலும் தன்னை மூடிக் கொள்வதில்லை.இறைவனின் பேரன்பின் நகலாக நமது முழு இதயத்தையும் திறந்து வைப்பது.இன்னும் பேசலாம் . எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை. ஒரு வேளை நான் இலக்கியம் படித்திருந்தால். இதை இதுவரை இல்லாத அளவுக்கு விவரித்திருப்பேன். இப்போது எனது உணர்வுகள் வார்த்தை சிறைக்குள் சிக்கி இருக்கிறது. ஒரு வேளை எனது சிறைப்பட்ட உணர்வுகளுக்கு. உங்கள் மனம் விடுதலை அளிக்குமானால். எனது அந்த பரந்த தேசத்தில் நீங்கள் கூட குடியுரிமை பெறலாம்.உங்கள் அன்பு ஜோதிடன் ராஜநாடி கா பா.
ஜோதிடம் என்பது ஏதோ எதிர்மறை சிந்தனைகளுக்கு உரமிடுவதாகவே தற்போது கையாளப்படுகிறது. சோதிடர்களிடம் ஜாதகர்கள் அதிகமாக கேட்கும் வார்த்தைகள் எதாவது தோஷமிருக்கா என்பதாகவே தெரிகிறது.மக்கள் இந்த நிலைக்கு தள்ளப்பட்டதற்கு சோதிடர்கள் மட்டுமே காரணம்.நீங்கள் எப்போதும் பயந்துகொண்டு வாழ்க்கை நடத்த இந்த சோதிடம் உதவுவாதாக மாற்றப்பட்டுள்ளது.ஒரு விசயத்தை கூறுகிறேன். மனதில் வைத்து கொள்ளவும்.எந்த சோதிட சாஸ்திரத்திலும் தோசம் என்ற வார்த்தை எங்குமே இல்லை.தோஷம் என்பதும் அதற்கு பரிகாரம் என்பதும் சோதிட சாத்திரத்தில் இல்லாதது. மக்களின் பயத்தை வைத்துக் கொண்டு பணம் சம்பாதிக்க இடையே யாரே ஏற்படுத்தி வைத்துள்ளனர். இதை கேட்டதும் உங்களுக்கு குழப்பமாக இருக்கலாம். சில சோதிடர்கள் கோபமும் அடையலாம். பாவம் அறியாமைதான் காரணம். இதைத்தவிர வேறு ஒன்றும் இல்லை. அவர்கள் கோபமடைகிறார்கள் என்பதற்காக நானும் உணர்ச்சிவசப்பட்டு கூறுவதை நிறுத்தி விட முடியாது.பிறகு அவர்களுக்கும் எனக்கும் என்ன வேறுபாடு நான் சோதிடத்தை புரிந்து கொண்ட பிறகு பேசுகிறேன். அவர்கள் சோதிடம் போல எதையாவது மனப்பாடம் செய்து விட்டு பேசுகின்றனர். அவர்களுக்கும் புரியவைக்க வேண்டும் என்பதே எனது முயற்சி.இதை கண்டு கோபமடையும் சோதிடர்களுக்கு ஒரு யோசனை கூறுகிறேன். தசா என்ற வார்த்தைக்கு பொருள் என்ன என்று புரிந்து கொள்ள முயற்சி செய்து பாருங்கள். அதற்கு பொருள் கிடைக்கவில்லை என்றால். முதலில் இருந்து சோதிடத்தை படியுங்கள். ஆனால் இந்த முறை சரியாக ஆசிரியரை தேர்ந்தெடுக்கவும். ஏனெனில் நீங்கள் அறியாமையில் இருப்பதற்கு முதல் காரணம் உங்கள் சோதிட ஆசிரியர்தான்.உங்கள் அன்பு ஜோதிடன் ராஜநாடி கா பா.
நாட்டில் ஜாதியை ஒழிப்பதை விட அவசரமாக கட்சிகளை ஒழிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
ஜாதி ஒழிக்க வேண்டும் தான் மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால் ஜாதியின் பெயரால் நடக்கும் தீங்குகளை காட்டிலும் கோடி பங்கு கட்சிகள் செய்கிறது.
எந்த சட்டத்தையும் கடைபிடிக்காத ஒரே கூட்டம் கட்சிகள்தான். இந்த கட்சி என்று தனியாக எந்த கட்சியையும் பிரித்து இது பரவாயில்லை என்று கூறமுடியாது. எல்லா கட்சிகளும் போட்டியிட்டு இதை செய்கிறது.
சமூக நீதி. பொதுவுடைமை என்று முழங்கும் கட்சிகள்தான் இதை அதிகமாக செய்கிறது.
சமூக சீரழிவிற்க்கு ஊற்றுக்கண்களாக கட்சிகள் இருக்கிறது.
உதாரணமாக இருக்க வேண்டிய தலைவர்கள் எவரும் ஒழுக்கத்தில் இல்லை.
நான் இன்று சென்னையில் கவனித்தேன். மத. ஜாதிய . தொழில் பிரிவு. என அனைத்து மக்களும் கார்களில் முன்னால் உள்ள பம்பர் கார்டுகளை எடுத்து விட்டனர்.
ஆனால் எந்த ஒரு கட்சி உறுப்பினர்கள் வண்டியிலும் அது நீக்கப்படவே இல்லை. இவர்கள் சமூகத்தில் என்ன செய்ய நினைக்கிறார்கள். இவர்கள் தனது தொண்டர்களுக்கு என்ன கற்றுத்தர நினைக்கிறார்கள்.
கட்சிகள் ஒழிக்கப்படுமானால் காவல்துறைக்கு முக்கால்வாசி பணிச்சுமை குறைந்துவிடும் என்று தோன்றுகிறது.
வழிபாடுகளை மாற்றுவதால் எதுவும் மாறப்போவது இல்லை.
உங்கள் எண்ணங்களையும் செயல்களையும். உங்களின் வாழ்க்கை பற்றிய தகவல்களை தெரிந்து கொண்டு மாற்றிக் கொள்ளுங்கள்.
இந்த வாசகத்தை உங்கள் மனம் ஏற்க மறுக்கும் . நிச்சயமாக மறுக்கும் என்பது எனக்கும் தெரியும்.
ஆனால் நிதர்சனம் என்பது நீங்கள் ஏற்பினும் மறுக்கினும் மாறப்போவது இல்லை.
இத்தனை நூற்றாண்டுகளாக மனித இனம் அனைத்தையும் மாற்றி விட்டு வாழ்க்கை மாறுதலுக்கு காத்திருந்து தோற்றுப் போனதை தவிர வேறு எதுவும் நடக்கவில்லை.
ஆனால் மனிதன் மாற்ற முடியாது அல்லது எப்படி மாற்றுவது என்று தெரியாது சிக்கிக் கொண்ட மனமாற்றம் என்பதை நீங்கள் கேள்விபட்டு இருக்கிறீர்களா.
உங்கள் வாழ்க்கையில் நடக்கவுள்ளதை தடுக்க முடியாது. ஆனால் அது நடக்கும் போது அப்படி நடக்கவிருப்பது உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தொலைத்துவிட்ட மகிழ்ச்சி பரப்பை மீட்டெடுக்க விருப்பம் இருந்தால்.
ராஜநாடி எளிய முறை ஜோதிடம் கற்றுக் கொள்ளுங்கள். அல்லது ராஜநாடி ஜோதிடர்களை அனுகி உங்கள் வாழ்க்கை பற்றிய ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுங்கள்.
உங்கள் அன்பு ஜோதிடன் ராஜநாடி கா பா.

அன்பு, இறக்கம், காருண்யம் என்பது ஏதோ ஒரு செயல் அல்ல.
அதற்கு பயிற்சியும் எடுக்க முடியாது.
தியானம் என்பது என்ன தெரியுமா? உங்களுக்குள் தொலைந்து போன அன்பை மீட்டெடுப்பதுதான். ஆனால் இதற்கு பயிற்சி உதவாது. பயிற்சி என்பது சில வழக்கங்களை நமக்கு தேவையானதை போல மாற்றிக் கொள்ள முயல்வது.
கிராமத்தில் ஒரு சொலவடை உண்டு நாயை குளிபாட்டி நடுவீட்டில் வைத்தாலும் என்று துவங்கும் அது. அதுபோல நமது பயிற்சி என்பது நாயை குளிப்பாட்டுவது போல திடீரென உங்கள் இயல்பு உங்களை அறியாமலேயே வெளிப்பட்டுவிடும்.
தியானம் என்பது ஒரு செயல் மாற்றம் அல்ல. ஒரு பயிற்சி அல்ல.
உங்கள் இயல்பை கண்டறியும் ஒரு பயணம். நீங்கள் நினைக்கலாம். அனைவருக்கும் தனித்தனியாக இயல்பு இருக்கும் என்று.
ஒவ்வொரு உயிரினமும் ஒரு பொது இயல்பின் மையத்தில் இருக்கும். அது போல மனிதனின் அந்த பொது மையம் உங்களுக்குள் இயக்கமற்றோ அல்லது வெவ்வேறு பயிற்சிகளால் தடைபட்டோ கிடக்கிறது. அது அவ்வப்போது வெளிவந்தாலும். சமூகத்தில் நாம் கற்ற விசயங்களை வைத்து அதனை மீண்டும் தாலாட்டுப் பாடி உறங்க வைக்கிறோம்.
அன்பு கருணை காருண்யம் என்பது வெறுமனே ஒரு பயிற்சி அல்ல. நீங்கள் பயிற்சி எடுக்கத் துவங்கினால் இன்னும் கூட மனதில் உள்ள கொஞ்ச நஞ்ச ஈரமும் காய்ந்து போய் விடும்.
உங்கள் உறவுக்காரர்கள் மீது சொத்துக்காக வழக்கு போட்டு விட்டு, தெருவில் உள்ள வயதானவருக்கு இருபது ரூபாய்க்கு தக்காளி சாதம் தானம் செய்வது அன்பு அல்ல. வாரத்தில் மூன்று நாட்கள் சிக்கன் பிரியாணி மட்டன் வறுவல் தின்றுவிட்டு தெருவில் உள்ள அடிபட்ட நாய்க்கு கட்டுப்போடுவது அன்பு அல்ல. வாழ்க்கை முழுவதும் மக்களிடம் இருந்து சுரண்டி. அண்ணன் தம்பி அக்கா தங்கைகளுக்கு கூட நயா பைசா சொத்து போய்விடக்கூடாது என்று தவமிருந்து பறித்துக் கொண்டு. வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு பிரிஞ்சி சாதம் பொட்டலம் தந்து பெருமையடிப்பது அன்பு அல்ல.
அது அன்பு அதற்கு பாகுபாடே கிடையாது. உங்களுக்குள் பாகுபாடு இருக்குமானால் அது அன்பும் கிடையாது.
நீங்கள் பெரிய தானப்பிரபு என்று சமூகத்தை ஏமாற்றுவதோடு நிற்காமல் உங்களை நீங்களே ஏமாற்றுகிறீர்கள்.
நீங்கள் அன்பு செய்ய முடிவு செய்து விட்டால் அதற்கு தியானம் செய்யலாம் இரண்டடுமே ஒன்றுதான். ஆனால் அதில் பயிற்சி செய்ய முடியாது. நீங்கள் இதுவரை செய்து கொண்டுள்ள பயிற்சி அனைத்தையும் கைவிட வேண்டும்.
ஏனெனில் தன்னை உணராதவரை உங்களால் இதை உணர முடியாது. நீங்கள் சமூகத்தின் படிவமாக இருக்க பயிற்சி பெற்றுள்ளீர்கள் . நீங்கள் பிறந்ததில் இருந்து அதுதான் நடக்கிறது. அந்த பயிற்சி அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்துங்கள். உங்களுக்குள் உள்ள விதை மெதுவாக உங்கள் மோலோட்டை உடைத்துக்கொண்டு மேலே வரும் பின்னர் அது படர்ந்து விரிந்து பூத்துக் குழுங்கி தனது நறுமனத்தை பரப்பத்துவங்கும்.
தற்போது நீங்கள் முன்னெடுக்கும் தியான நடைமுறை எல்லாம் இன்னும் உங்கள் மையத்தை விட்டு அதிக தூரம் இழுத்துச் செல்லும்.
உங்கள் அன்பு கா பா

நீங்கள் உங்கள் வேதனைகளோடு, துக்கங்களோடு, ஆற்றாமைகளோடு, அறியாமைகளோடு குறிப்பாக கோபங்களோடு போரிட்டுக் கொண்டே இருக்கிறீர்கள்.
ஒன்றை கவனித்தீர்களா இதுவரை உங்கள் போராட்டம் என்றுமே வெற்றி பெற்றதே இல்லை. இந்த போராட்டம் என்பது நீரின் மேல் எழுத்து போல மறைந்து கொண்டே இருக்கிறது. இறுதியில் நீரின் வடிவம் அப்படியே இருப்பதைப் போல இவைகள் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருக்கிறது.
இவைகளுடன் போராடுவதால் எந்த பயனும் கிடையாது. காரணம் இவை எல்லாம் இயக்கம் கொள்வதே உங்களிடம் இருந்துதான். உங்களை நீங்களே எப்படி தோல்வி அடையச் செய்ய முடியும். எனவே இறுதி வரை போராட்டம் முடியப் போவதுமில்லை.
ஒரே ஒரு எளிதான வழி இருக்கிறது. இதுதான் இந்த உலகம் முழுவதும் உள்ள மார்க்கங்கள் போதிக்கிறது. உங்கள் சக்தி மையம் தொடர்ச்சியாக வெடித்து சிதறிக் கொண்டே இருக்கிறது. அதற்கு பிரபஞ்சம் எரிபொருளை வழங்கிக் கொண்டே இருக்கிறது.
நீங்கள் நினைக்கலாம் உங்களுக்குள் எழுகின்ற ஆசை அல்லது வெறுப்பு என்பது உங்களால் உற்பத்தி ஆனது என்று. ஆனால் உங்களை விட என்னைவிட அவைகளுக்கு வயது அதிகம். நீங்கள் ஆசைபட்டது முன்னொரு காலத்தில் வேறோருவருடையது.
நீங்கள் செகெண்ட் ஹெண்ட் பொருளைப் போல இன்பம் துன்பம் அனைத்தையும் வாங்கி பயன்படுத்துகிறீர்கள். இந்த உலகில் புதிய இன்பம் அல்லது புதிய துன்பம் என எதுவும் இல்லை. சுழற்சியில் அது பவனி வருகிறது.
நாம் பேச வந்ததில் இருந்து நழுவிச் செல்கிறோம்.
உங்கள் மனம் உங்கள் சூழலைப் பொறுத்து உங்களின் இருப்பை தக்க வைக்க அதற்கு தேவையான எண்ணங்களை இங்கிருந்து எடுத்துக் கொள்கிறது. நீங்கள் எடுத்துக் கொண்டு . உங்களுக்குள் வைத்துக் கொண்டு அதனுடன் போராட்டம் நடத்துகிறீர்கள் .
ஆம் நீங்கள் உங்கள் வேதனைகளோடு, துக்கங்கஙாளோடு, ஆற்றாமைகளோடு, அறியாமைகளோடு குறிப்பாக கோபங்களோடு போரிட்டுக் கொண்டே இருக்கிறீர்கள்.
ஆனால் சரியாக புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் போராடுவதை கைவிட்டு விட்டு. இந்த எண்ணங்கள் எந்த சூழலில் உங்களுக்குள் நுழைகிறது என்று விழிப்புடன் கவனிக்கத் துவங்குங்கள். படிப்படியாக இவைகள் வழிப்போக்கர்கள் போல தானாக வந்து தானாக கடந்து போவதை உணருவீர்கள். நீங்கள் அதற்கு முக்கியத்துவம் அளித்து விருந்து வைக்கத் துவங்கினால் அவைகள் உங்களுக்குள் தங்கி விடும். நிச்சயமாக அவை தங்கி விடும் கவனம்.
நீங்கள் இவைகள் உங்களுக்குள் எங்கு மையம் கொள்கிறது. எந்த சூழலில் அந்த மையம் இவற்றை பெறுகிறது என்று மட்டும் புரிந்து கொள்ள முயலுங்கள்.
எல்லாம் கடந்து போகும் என்று உங்களுக்கு தானாக புரியத் துவங்கும்
உங்கள் அன்பு கா பா.

உலகம் முழுவதும் உள்ள அனைத்து பிரிவுகளுக்கான வேதம் ஆகமம் எல்லாவற்றிலும் அன்பையே காணமுடிகிறது. ஆனால் அதை பின்பற்றும் எவரிடமும் அதன் சுவடே இல்லை . ஆம் நாம் வேதங்களையும் ஆகமங்களையும் மனனம் செய்து ஒப்புவித்தால் இறைவனிடம் இருந்து பரிசு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
நான் சில ஆண்டுகள் முன்பு . ஒரு சமஸ்கிருதம் தெரிந்த நபரிடம் ஒரு மந்திரத்தை குறிபிட்டு அதன் பொருள் என்ன என்று தெரிந்து கொள்ள கேட்டேன். அவர் அதற்கு அளித்த விளக்கம் சிறப்பானது. ஆம் எல்லா மந்திரங்களிலும் பொருள் புதைந்து தான் கிடக்கிறது. ஆனால் நாமோ அதை சைனா மேக் மெமரி கார்டு ரீடர் போல சவுண்ட் பார் போல திருப்பி திருப்பி சொல்கிறோம் . அதன் பொருளை தெரிந்து கொள்ள மட்டுமே அது உருவாக்கப்பட்டது. அது வேறு மொழியானதும் நமக்கு மந்திரம் போல தெரிகிறது. அதை உணர்ந்தவர்கள் கூட இதையேதான் செய்கிறார்கள். நீங்கள் ஒரு பாட்டை எத்தனை முறை ரிப்பிட் போட்டு பாடவிட்டாலும் . சவுண்ட் சிஸ்டம் ஞானத்தை அடையாது. நாமும் சவுண்ட் சிஸ்டம் போல உச்சரிக்கிறோம்.
ஆம் திருக்குறளை மீண்டும் மீண்டும் படிப்பதால் . திருவள்ளூர் என்ற சித்தர் நமக்கு நல்லது செய்வார் என்று காத்திருக்கிறோம்.
திருவாசகத்தை மீண்டும் மீண்டும் படிப்பதால் மாணிக்கவாசகரோ . அல்லது அதை மாணிக்கவாசகர் உருவில் வந்து எழுதிய சிவனோ வந்து நமக்கு எதுவும் செய்ய போவது இல்லை.
புத்தகங்கள் எழுதியதே படிக்கத்தான். படிப்பதே புரிவதற்குதான். புரிந்து கொள்வது நடைமுறைபடுத்ததான். ஆனால் நாம் அர்த்தம் புரியாமல் சத்தமாக படித்து எழுதியவரை அழைக்கிறோம். அதுவும் எனக்கு புரியவில்லை என்று அழைத்தால் கூட ஒரு நியாயமான அளவு காரணம் இருக்கிறது. ஆனால் நாமோ அவைகளை சத்தம் போட்டு படித்துவிட்டதால் எதாவது வீடு. கார். நல்ல வேலை. அல்லது பணம் எதாவது வரும் என்று திட்டமிட்டு எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் படிக்கிறோம்.
எந்த மதத்தின் வேதமாக இருப்பினும் அது ஒன்றையே குறிக்கின்றது. அது மையப் பொருளாக இருக்கிறது.
நீர் என்று அழைக்கப்படும் அதே பொருள் வாட்டர் என்று ஒரு நாட்டில் அழைக்கப்படுகிறது. நீர் வேறு வாட்டர் வேறு அல்ல. உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.
எந்த பிரிவானாலும் வேதங்கள் என்பது புரிந்து கொள்ள மட்டுமே. புரிந்து கொண்ட பிறகு , அதை கடந்து அதில் எந்த சிறப்பும் இல்லை.
உங்கள் அன்பு கா பா
