கடவுள் – GOD

கடவுளை நம்புபவனுக்கு அதை புரிவதில் பிரச்சினை அதனால் வெவ்வேறு வடிவங்களில் புரிந்து கொள்ள முயல்கிறான்.

எல்லாம் அவன் எனும் போது எதை, எந்த வடிவத்தில் புரிந்து கொண்டால் என்ன, அவனைத்தான் புரிந்து கொள்கிறோம்.

ஆனால் புரிந்து கொள்வது இங்கு மிக முக்கியம்.

கா பா

சீமான் அரசியல் வாழ்க்கை

#நாம்தமிழர்கட்சி#சீமான் அவர்கள் ஜாதகப்படி வரும் சட்டமன்றத் தேர்தலில் ஒரு நிலைத்தன்மை கிடைக்கும். இத்தனை ஆண்டுகள் அரசியல் முன்னெடுப்புக்கு ஒரு சரியான அங்கீகாரம் கிடைக்கும். இது 2021 மே மாதம் பிறகு துவங்கி 2029 வரையிலான அரசியல் வாழ்க்கை மற்றும் பொருளாதார நிலை மேம்பாடு போன்றவற்றை பெற்றுத்தரும். ஆனால் உடன் இருந்து செயலாற்றுபவர்கள் மீது கவனம் வைக்க வேண்டும். கடன் பெற்றோ அல்லது குடுத்த இடத்தில் ஏம்ற்றபட்டோ அதன் மூலமான மனவருத்தம் வாழ்க்கை முழுவதும் தொடரும். இவர் வாழ்க்கையில் 2022 பாதிக்கு மேல் வழக்குகளை சந்தித்தல் துரோகங்களை சந்தித்தல் நடக்கும். 2022 துவங்கி 2024 வரை தொடர் பயணத்தில் இருப்பார். ஆனால் 2021 ஆட்சியை கைபற்றுவது பற்றி நான் எதுவும் சொல்லவில்லை. அரசியல் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும் . அது மட்டுமே.

இன்னும் பல அரசியல் பற்றிய மேலோட்டமான பலன்களை நேரம் கிடைக்கும் போது போடுகிறேன்.ஆனால் வரக்கூடிய தமிழக தேர்தல் களத்தில் இன்னும் பல மாற்றங்கள் நிகழும். தற்போது உள்ள கருத்து கணிப்புகள் பொய்த்துப் போகும். இனிமேல்தான் ஆட்டமே இருக்கிறது.

இறுதி பட்டியல் வருவதற்குள் நெரய கூத்துக்கள் நடந்தேறும்.அடுத்து முதல்வர் நாற்காலியை யார் அலங்கரிப்பார் என்று நேரம் வரும் போது கூறுகிறேன். ஆனால் நீங்கள் பொதுவாக நினைப்பவர்கள் இல்லை.

உங்கள் அன்பு ஜோதிடன் ராஜநாடி கா பா

ஜோதிட சாஸ்திரம் ஸ்கந்தம் ஸம்ஹிதம்

முதலில் கருவிகளை கவணமாக உள்வாங்கி புரிந்து கொள்ள வேண்டும்.

பிறகு உங்கள் செயல்களுக்கு கருவிகள் தானாக உதவத்துவங்கும்.

ஜோதிஷ சாஸ்திரம் என்ன கூறுகிறது.

முதலில் சாஸ்திரம் என்பதைக்கூட பலருக்கு சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை.

சாஸ்திரம் என்ற சொல் என்னவோ ரகசியம் என்ற பொருண்மையை கூறுவதாக நினைக்கிறார்கள்.

சாஸ்திரம் எனும் தேவநகரி வார்த்தைக்கான தமிழ்ச் சொல் நூல் என்பதாகும்.

சரி ஜோதிஷ சாஸ்திரம் தெளிவாக கூறுகிறது.

எது கணிதம்
எது ஜாதகம்
எது ஸம்ஹிதம் என்று

இதில் ஒரு நபரின் வாழ்க்கை பற்றிய குறிப்புகளை அறிய உள்ள உக்தி ஜாதக ஆப்தமான ஜாதக ஸ்கந்தம்.

இதுதான் பிறப்பை வைத்து வாழ்க்கையை அனுமானித்தல் என்ற அனுகுதலை நமக்கு வழங்குகிறது.

அடுத்துள்ள ஸம்ஹிதம் என்பது நடப்பவைகளை முன் தீர்மானிக்க எடுக்கும் உக்தி ப்ரயோகங்கள் பற்றியது.

ஆரூடம். பிரசன்னம். நிமித்தம் என்பதெல்லாம் இதை சார்ந்தது. பலர் இதை ஜாதகப் பிரிவுகளுக்குள் போட்டு குழப்பம் செய்கிறார்கள். திதி யோகம் கரணம் போல பல் வேறு விசயங்களை ஜாதக கணிதங்களுக்குள் பிதுக்கி நுழைத்துப் பார்க்கிறார்கள்.

முதலில் கையில் உள்ள கருவியை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

பரிகாரமற்ற ராஜநாடி ஜோதிடன் உங்கள் அன்பு காப்பான் கா பா.

#ஜோதிடபுத்தகம்

வணக்கம் நண்பர்களே

கா.பா.அவர்களின் படைப்பில்

ஆசிரியர் தினத்தைத்தை
முன்னிட்டு அடிப்படை

ஜோதிடபுத்தகம்

அனைவருக்கும்
இலவசமாகதந்துள்ளார்

Friendship

இரண்டு நண்பர்கள் சில மாதங்களாக மிகவும் நட்பாக பழகி வருகிறார்கள்.

ஆம் நீங்கள் பழகுவதைப்போலத்தான்.

நீங்களும் நண்பரக்களுடன் பழகி வருகிறீர்கள்தனே.

ஆனால் ஒன்றை கவணித்துள்ளீர்களா சிலர் ஆரம்பத்துல உங்களை தலையில் தூக்கி வைத்து ஆடுவார்கள் கொஞ்சம் நாள் கழித்து அந்த நட்பே கெட்ட கணவு என்பது போல புலம்பிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் நீங்கள் எதுவுமே சேய்து இருக்க மாட்டீர்கள். அல்லது திட்டமிட்டு அவரை ஏமாற்றி இருக்க மாட்டீர்கள். ஆனால் அவர்கள் உங்களை திட்டி தீர்த்து விடுவார்கள். அப்படி செய்வதைக்கூட நீங்கள் கண்டு கொள்ளாமல் சிரித்துக் கொண்டே கடந்து விடுவீர்கள். நீங்கள் உங்கள் அந்த நண்பன் ஜாதகத்தை வாங்கி பாருங்க அதில் செவ்வாய் உள்ள வீட்டில் இருந்து 1,5,9 ல் ராகு அல்லது கேது நிச்சயம் இருக்கும். இவர்கள் நட்பை சந்தேகத்துடனே அனுகி இவர்களாகவே ஏமாந்துவிட்டு நண்பர் ஏமாற்றி விட்டதாய் பொழம்பி தள்ளுவார்.

இவரிடம் கடண் மட்டும் வாங்கவோ அல்லது கொடுத்தோ விடாதீர்கள். அதையும் கூட விமர்சனம் செய்யும் காலம் வரும்.

இதை படிக்கும் உங்கள் ஜாதகத்தில் கூட் மேற் சொன்ன அமைப்பு இருந்தால் நீங்கள் எப்படி என புரிந்து கொள்ளுங்கள்.

என்னிடம் பழகும் வரை பழகி விட்டு நேரம் வரும் போது என்னைபற்றியே குறை சொல்லும் நண்பர்களை பற்றி தெரியும். அதனால்தான் அவர்களிடம் மிகவும் நம்பிக்கை வைக்கவே மாட்டேன் வருந்தவும் மாட்டேன்.

முகநூலில் கூட இதுதான். என்னிடம் நட்பிலேயே இருந்துவிட்டு என்னைபற்றியே பின்னால் வேறு நபர்களிடம் தவறாக பேசி பொழம்புபவர்களை பற்றி எனக்கு தெரியும். அது நீங்கள் என நான் செல்லவில்லை. ஆனால் உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் உள்ள வீட்டில் இருந்து 1,5,9 ல் ராகு அல்லது கேது இருந்தால் நீங்களும்தான்.

கா பா

Friend is a best friend

காலை துவங்கி மாலை வரை வீட்டில் அனைத்து வேலைகளையும் இழுத்து தனது தலையில் போட்டுக்கொண்டு. முடித்துவிட்டு. முகம் கழுவி பவுடர் பூசி பக்கத்து வீட்டில் உள்ளவர்களுடன் கூடி பொரனி பேசும் பெண்களே.

நீங்கள் எப்படியாவது நேக்காக பேசி உங்கள் தோழியின் ஜாதகத்தை வாங்கி கொண்டு வந்து அவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் உள்ள வீட்டில் இருந்து 1,5,9 ல் ராகு அல்லது கேது உள்ளதா என பாருங்கள். அப்படி இருந்தால். அவர் உங்களிடம் பொரனி பேசுவதைப்போல உங்களை பற்றியும் யாரிடமாவது பேசிக் கொண்டு இருப்பார். உஷாரா ஹேண்டில் பண்ணனும்.

ஒரு வேளை உங்கள் ஜாதகத்தில் அப்படி இருந்தால் அப்பவும் உங்கள சுத்தி இருக்குறவங்க எல்லாருமே இதையேதான் செய்வாங்க.

பெறகு குடும்பியடி சண்டை வரை போயிரும் உஷார். லிமிட்டா போட்டு குடுங்க அளவுக்கு மேல போனா அஸ்திரம் உங்க பக்கமே திரும்பிரும்.

கா பா

Business check Saturn…

நீங்கள் புதிதாக ஒரு தொழில் துவங்கியுள்ளீர்கள். அல்லது துவங்க உள்ளீர்கள். அல்லது துவங்கி நடத்திக் கொண்டு உள்ளீர்கள்.

ஏதாக இருந்தாலும் உங்களிடம் பணிக்காக சேரும் பணியாளர்கள் ஜாதகத்தை ஒரு முறை புரட்டி பார்ப்பதால் உங்கள் தொழிலை நீங்கள் நிம்மதியாக சிறப்பாக செய்ய முடியும்.

அவர்கள் ஜாதகத்தில் சனி வக்ரமாக இருந்தால் அவர்கள் உங்களிடம் வேலைக்கு வந்தால் அவர்களை அனைத்து இடங்களிலும் பணி செய்ய பயிற்சி கொடுத்து பயன்படுத்துங்கள்.

குருவில் இருந்து 1,5,7,9 ல் சனி இருந்தால் அவர்களுக்கு தொடர்ந்து நடக்கும் பணிகளை தரலாம். பொறுப்பான பணிகளை தரலாம்.

கேதுவுக்கு 1,5,9 ல் சனி இருந்தால் அவர்களுக்கு யோசித்து செயல்பட வேண்டிய பணி. நுட்பமான பணிகளை தரலாம் அவர்களுக்கு முடிந்தவரை தனிமையான இடங்களில் உள்ள பணிகளை வழங்கவும். புரட்சி புண்ணாக்கு எல்லாம் இவர்கள்தான் துவங்கி வைப்பார்கள். இவர்களை கவணமாக கையாள வேண்டும். உங்களுக்கு வேட்டியில் விட்டுக் கொண்ட ஓனானைப் போல இவர்கள். இவர்களை சரியாக உபயோகிக்க கற்றுக் கொண்டால். உங்களைப் போல ஆயிரம் மடங்கு உங்கள் கம்பெனிக்காக உழைப்பார்கள். கொஞ்சம் சீண்டினால் உங்கள் நிம்மதியே போய்விடும்.

ராகுவுக்கு 1,5,9, ல் சனி இருந்தால் வாடிக்கையாளர்களிடம் பேசுதல். ரசாயனம் ஆபத்தான பணிகளை வழங்குங்கள். மறந்தும் கூட நிதி நிர்வாகத்தை இவரிடம் கொடுக்க வேண்டாம்.

மற்ற விஷயங்களில் சந்தேகம் வந்தால் #ராஜநாடி ஜோதிடர்களை அனுகவும்.

முக்கியமாக நம்பி ஒப்படைக்கும் பணிகளில் ராகு அல்லது கேது க்கு 1,5,9, ல் செவ்வாய் இருப்பவரை அனுமதிக்க வேண்டாம். நம்பிக்கைக்கு அவ்வளவு பெரிய பாத்திரமாக இவர்கள் இருக்கமாட்டார்கள் வேண்டும் என்றால் சிறிய நம்பிக்கை சொம்பு போல வைத்துக் கொள்ளுங்கள்.

சனி வக்ரமோ பரிவர்த்தனையோ அடைந்திருந்தால் அவர் உங்கள் நிறுவனத்திலேயே தொடர்ந்து இருக்க மாட்டார் எப்போது வேண்டுமானாலும் வெளியேறுவார். இவர் பணியை செய்ய எப்போதும் ஒருவரை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்

இன்னும் நெரய உள்ளது

பிறகு பேசலாம்

கா பா

North & South Node in Indian Astrology

#ராகு #கேது எப்போது வந்தது?

நமது நண்பர் மற்றும் மதிப்பிற்குரிய Jothida Sri Chandra Guptha அவர்கள் ஒரு பதிவின் மூலம் கேள்வி எழுப்பி உள்ளார்.

ராகு கேது இந்திய சோதிடத்தில் எப்போது நுழைந்தது என்று.

ஆனால் இது போன்ற கேள்வி மற்றும் அதற்கான பதில்களை நான் முகநூலில் பார்த்துள்ளேன்.

சரி அது எப்போது நுழைந்தது.

குழந்தைக்கு கண் எப்போது திறந்தது என்று கேட்கலாம். கண் எப்போது முளைத்தது என்ற கேள்வி அவ்வளவு சரியானதாக இருக்காது. மேலும் கண் திறந்தது என்பது கூட திறந்திருந்த கண்தான் எப்போது பயன்பாட்டுக்கு வந்தது என்பதுதான் கண் திறந்தது.

சரி வரலாற்று ரீதியான தர்க்க விவாதங்கள் ஒரு எல்லைக்கு மேல் செல்ல முடியாத அளவிற்கு சிக்கிக் கொள்ளும் ஏனெனில் வரலாறு என்பதே அவனபடுத்தபட்ட சான்றுகளின் அடிப்படையில் உணரபடுவதே. ஆனால் பல விசயங்களை வரலாற்றுபடி ஆராய முடியாது.

ஆண்டம் எப்படி வெடித்திருக்கும் என கூகுளில் ஒரிஜினல் வீடியோ சர்ச் பண்ணுவது போல ராகு கேது எப்போது நுழைந்தது எனத் தேடுவது.

ஆனால் அண்ட பெரு வெடிப்பு பற்றி ஆய்வுகள் நடக்காமல் இல்லை. ஆனால் அவர்கள் அதை எப்படி செய்கிறார்கள். அதிக பட்சமாக 4000 ஆண்டுகளுக்குள் நடந்தவைகளே வரலாற்று பதிவுகளாக ஏற்றுக் கொள்ள படும். ஆனால் அது நடந்து பல் கோடி ஆண்டுகள் கடந்து விட்டதே.

பிறகு எவ்வாறு ஆய்வது.

மிச்ங்களை வைத்து ஆராயலாம். அதாவது தற்போது உள்ள இயக்கத்தை வைத்து முன்பு நடந்ததை ஊகிக்கலாம். அமைப்பு இயக்கம் உருவம்அதன் ஒன்று பட்ட நடவடிக்கை மாற்றங்கள். அதன் அடிப்படையில் தக்கவைத்துள்ள அமைப்பு என ஆராயலாம்.

சரி இந்திய சோதிடத்தில் ராகு கேது எப்போது வந்தது.

சிலர் சிலருடைய நூல்களை. காலங்களை குறிபிட்டு சில காலங்களை ஆதாரங்களை போல நினைத்து முன் வைக்கவும் செய்யலாம். நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் நம்மிடம் உள்ள சோதிட நூல்கள் இறுதியானவையோ முழுமையானதோ இல்லை. பல அழிவுகளை கடந்து நம்மிடம் கிடைத்த நூல்கள் சொச்சம் மட்டுமே. சுருங்க சொன்னால்.

உண்மையான சோதிடத்தின் நூல் இருந்திருக்கும் என்றால் நமது கைகளில் தற்போது உள்ளது அந்த நூலில் முன் மற்றும் பின் அட்டைகள் மட்டுமே.

நாம் இப்போதும் கூட தலைப்பில் இருந்து விலகி செல்கிறோம்.

பிறகு எவ்வாறு ஆராய்வது ?

அதன் அடிப்படை கட்டமைப்பு பற்றி புரிந்து கொள்வதன் மூலம் அறியலாம்.

உலகம் முழுவதிலும் சோதிடம் செழித்து அடர்ந்து பழத்து குழுங்கினாலும் இந்திய சோதிடம் தனக்கான ஒரு தனித்துவத்தை ஆரம்பகாலத்தில் இருந்தே வைத்துக் கொண்டுள்ளது.

உலகம் முழுவதிலும் ராசி மண்டலங்களின் வழியாக சோதிடத்தை அனுகினாலும். நம்மைபோலவே அவர்கள் செய்தாலும்.

நாம் சில மாற்றங்களை கொண்டுள்ளோம் lunar Manson என்று அழைக்கப்படும் உக்தியை நாம் கையாள்கிறோம். பெயரே பாதி விசயத்தை கூறிவிடும். இது என்ன lunar Manson சந்திர விடுதி என தமிழ் படத்தினால் அதுவும் கூட சரிதான். சந்திரன் தங்கும் விடுதி என அவர்கள் குறிபிட்டது நட்சத்திரங்களை .

Tropical zodiac signs மற்றும் sidereal zodiac signs என்ற இரு வேறு பார்வைகள் உள்ளன இதை பேச துவங்கினால் நீண்டு கொண்டே போகும்.

சருக்கமாக பருவமண்டல ராசி கூட்டங்கள். மற்றும் நட்சத்திர மண்டல ராசி கூட்டங்கள் என்று கூறலாம்.

இதில் வேறு நாடுகளில் பருவ மண்டல ராசிகள் பயன்பாட்டில் உள்ளது அதாவது மேசம் துவங்கி மீனம் வரை இது இதன் பெயருக் கொப்பவே பருவங்களை சார்ந்து பிரிக்கபட்ட ஒன்றுதான்.

ஆனால் இந்திய சோதிடம் தனித்துவமானது இதை வேதசோதிடம் என பலரும் கூறுவர் நாம் அதற்குள் செல்ல வேண்டாம். ஏனெனில கோழி முதலில் வந்ததா முட்டை முதலில் வந்ததா என்பது போல இது குழப்பமானது சோதிடத்தை வைத்து வேதங்கள் பெயரெடுத்தனவா அல்லது வேதத்தை வைத்து சோதிடம் பெயரெடுத்ததா என்பது விவாதத்திற்குட்பட்டது. ஆனால் நான் கூறுவேன் முட்டைதான் முதலில் வந்தது என இதைபற்றி இங்கு பேச வேண்டாம் பரிணாம வளர்ச்சி கொள்கையை புரிந்து கொண்டவர்களுக்கு இது விளங்கும். வேதசோதிடம் என்பது One of superlative word.

சரி விசயத்திற்கு வருவோம்.

இந்திய சோதிட முறை நட்சத்திர சோதிடம் என உலகோர்களால் அழைக்கபடுகிறது. உடனே நட்சத்திர பலன் என்று புரிந்து கொள்ள வேண்டாம் பலனறிதல் என்பது இதன் ஒரு பயன்பாடு மட்டுமே . இது காலம் பற்றிய கணிதம்.

அனைவருக்கும் மேசம் என்பது துவக்கபுள்ளி அதுவும் பின்னோக்கி நகர்ந்து கொண்டே இருக்கும்.

ஆனால் இந்திய சோதிடம் அசுவனியின் ஆரம்ப புள்ளியை வைத்து துவங்கி இந்த வான்மண்டலத்தை புரிந்து கொள்கிறது.

நட்சத்திர வழி புரிதலில் தந்த்ரா என்ற பிரிவு கூறும் கணிதங்கள். உலகின் முன்னோடிகளாக நம்மை தரமுயர்த்துகிறது. Trigonometry ஐ அறிமுகம் செய்ததும் இங்குதான். வான்கணித அளவீட்டு பொதுப்படுத்துதலில் 120° என்பது முக்கியத்துவம் வாய்ந்தது.

எனவேதான் 120• புள்ளிகளின் நட்சத்திர அதிபதிகள் அதே கிரகமாகவே இருக்கும். மேசம். சிம்மம். தனுசில ஒரே நட்சத்திர அதிபதிகளாகவே வரும்

இது இந்த நட்சத்திர சோதிடத்தின் அடிப்படை கட்டமைப்பு.

இந்த கட்டமைப்புதான் அடித்தளம் இந்த அடித்தளம் ஒன்பது அதிபதிகளைக் கொண்டே உருவாக்கபட்டுள்ளது அந்த ஒன்பது அதிபதிகளில் ராகு மற்றும் கேது அடங்கும்.

எனவே வின்முட்டும் இந்த சோதிட கோபுரத்தின் இடை செங்கலாக ராகு கேது இல்லை அதன் அஸ்திவாரத்திலேயே இவைகள் உள்ளன. இவை அப்போது வந்தது இப்போது வந்தது என்று எதையாவது பேசலாம் ஆனால் இவைகள் துவக்கத்தில் இருந்தே வந்தது.

ஆனால் மக்களுக்கு ராகு கேது என்பது என்ன என்று தெரியாமல் இருந்தபடியால் அதன் முக்கியத்துவம் பல்வேறு காலகட்டங்களில் கூடி குறைந்து இருக்கலாம். ஆம் இப்போதும் கூட பலருக்கு ராகு கேது என்றால் என்ன என்று தெரியாது. பல சோதிடர்களின் அதை செம்பாம்பு கரும்பாம்பு என்றுதான் நம்பிக் கொண்டு இருக்கிறார்கள்.

மீண்டும் மற்றொரு தலைப்பில் பேசலாம்.

கா பா ஜோதிட எழுத்தாளர் மற்றும் பயிற்சியாளர். ஜோதிடர். சுய முன்னேற்ற பேச்சாளர்.