Wealth ….

உங்கள் ஜாதகத்தில்.

அனைவருக்கும் வெற்றி மீது ஒரு அளவு கடந்த பேராசை இருக்கத்தான் செய்கிறது . நாம் வெற்றி என்று எதை முடிவு செய்து வைத்துள்ளோம் என்பது பெரிய விவாதத்திற்குட்பட்டது. இருப்பினும் நம்மில் பலர் புரிந்து வைத்து உள்ளதுபடியே பேசலாம்.

வெற்றி என்பது பொருளாதாரத்தை சார்ந்துள்ளது என்ற நமது முடிவுப்படியே பேசலாம். ஆனால் அதன் பெயர் வெற்றி இல்லை.

நமக்கு பொருளாதாரம் மீது அளப்பரிய காதல் காதல் என்பதை விட மோகம், போதை, அடிமைத்தனம் என வைத்துக் கொள்ளலாம்.

சரி யாரெல்லாம் செல்வத்தை அனுபவிக்க முடியும். அதற்கான செல்வம் யாருக்கு கிடைக்கும் என்று பார்க்கலாம். சோதிடப்படி நான் கூறும் விதிகளை பொருத்திப்பார்க்க சோதிட அறிவு தேவை என்று குழப்பிக் கொள்ள வேண்டாம். நான் பதிவிடுவதே சாமான்ய மக்களுக்குத்தான். எனவே அனைவரும் உங்கள் குடும்ப ஜாதகங்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

நான் கூறும் அமைப்பு அதில் எந்த ஜாதகத்திலாவது உள்ளதா என பாருங்கள்.

சில எதிர்மறை சிந்தனைக்கு பிறந்தவர்கள் அதெப்படி நடக்கும் எனக்கெப்படி கிடைக்கும். என்று புலம்பலாம் நீங்கள் அதை கண்டு கொள்ளாதீர்கள். வாழைப்பழ சோம்பேறிகள் வாரமலரை படித்து விட்டு அதுதான் சோதிடம் என்று நினைத்துக் கொண்டு வந்து புலம்புவர்.

ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் முகநூலில் தனது ஜாதகத்தை மட்டுமே கடந்த மூன்று ஆண்டுகளாக எல்லா குழுலையும் போட்டு பலன் கேட்டுக் கொண்டே உள்ள பல மனநோயாளிகளை பார்க்க முடிகிறது. அவர்களைப் பொறுத்தவரை அவர்களது வேதனை மிகுந்த வாழ்க்கையை கண்டு பிடிக்கும் சோதிடர்களுக்கு பரிட்சை வைப்பது மட்டுமே. அவர்கள் கேட்பதற்கு யாருக்கும் பதில் சொல்ல வேண்டும் என்கின்ற கட்டாயமில்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வில்லை . அதையும் கடந்து அவர்கள் முகநூலில் கண்ட இடங்களில் ஜாதகம் போட்டு பலன் கேட்பதை நான்கு வருடங்கள் செய்வதற்கு பதிலாக உருப்படியான வேலையை செய்திருந்தால் இந்நேரம் நல்ல நிலையில் இருந்திருக்கலாம். நீங்கள் கவனித்து உள்ளீர்களா என எனக்கு தெரியாது. ராஜநாடி நண்பர்கள் யாரும் ஜாதகம் போட்டு முகநூலில் பலன் கேட்டிருக்கவே மாட்டார்கள். ஏனா சோதிடருக்குனே ஒரு கெத்து இருக்கு. அது ராஜநாடி நண்பர்களுக்கு கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் ஏனா சுயநம்பிக்கை அப்படி

சரிங்க உங்க குடும்ப ஜாதகத்தை எடுத்துக்கங்க

உடனடியாக செல்வம் வரும் என்று யோசிக்க கூடாது ஏனா ஒவ்வொரு மரத்திலும் ஒவ்வொரு பருவத்தில் கணி வரும் உங்களுக்கு காலம் வரும் போது உயர்வது நிச்சயம் என புரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் குடும்பத்தில் குறிபிட்ட ஒருவருக்கு மட்டுமே இருந்தால் அவர் இருக்கும் வரை செல்வநிலை திருப்தியாக இருக்கும்.

சரி உங்கள் ஜாதகத்தில் சனி உள்ள வீட்டை ஒன்று என எண்ண துவங்கி பின் பக்கமாக எண்ணவும். அதாவது கடிகாரமுள் சுற்றுவதற்கு எதிர்புறமாக எண்ணிவர 1 ,5,7,9 உள்ள கட்டத்தில். சுக்கிரன் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் நிச்சயம் நீங்கள் செல்வந்தராக முடியும். ஒரு வேளை உங்கள் ஜாதகத்தில் சனி வக்ரமாக இருந்தால் 25- 36 வயதிற்குள் கடினமாக உழைத்து பொருளை ஈட்டலாம்

அவ்வாறு சனிக்கு 1,5,7,9 ல் சுக்கிரன் இல்லாவிட்டால் உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இருந்தால் அவரை சுகபோகமாக வாழ வையுங்கள். செல்வம் வந்து விடும். இந்த நிலையில் சனி வக்ரமாக இருந்தால் 36 வயதிற்கு மேல் செல்வநிலை பெருகும்

கா பா.

திதி

எதையாவது வாய்க்கு வந்தபடி பேசி அனைவரையும் மடைதிருப்பி விடுவதில் பலருக்கு ஒரு ஆனந்தம்.

இப்பொழுது ஒரு பதிவு கண்ணில் பட்டது.

#திதி

என்பதற்கு ஒரு மொக்கை விளக்கம். அதை படிக்கும் போது சிரிப்பதா அழுவதா னு தெரியல. சரி அதை விட்டு விட்டு கடந்து செல்லத்தான் வேண்டும்

இருந்தாலும் அதை பற்றி நாம் இப்போது பேசலாம்

திதி என்பது சந்திரன் நிலையை குறிக்கும் சொல்.

இது சந்திரனை வைத்து காலத்தை கணக்கிடும் ஒரு அலகு

இந்த சந்திரன் சூரியனை சார்ந்து ஒளிருவதில் உள்ள வேறுபாடு மூலம் காலத்திற்குள்ள பிரித்தறிய படுகிறது . இதுவும் ஒரு அலகுதானே ஒழிய இதுவே இறுதியான காலத்தை அறியும் அலகு கிடையாது

காலங்கள் மாறமாற மனதனின் பார்வைகளும் அறிவு நிலைகளும் மாறமாற ஒவ்வொரு விசயத்திலும் அவனுக்கு அதிக அதிக எளிதாக்கபட்ட வழி முறைகள் கிடைக்கின்றன.

ஒவ்வொரு விசயமும் உபயோகிக்கத்தான் அது தொடர்ச்சியாக அடுத்த அடுத்த எளிதான வடிவத்தைப் பெருகிறது.

ஒரு காலத்தில் மக்கள் நேரத்தை அறிய நிழலை பார்க்க வேண்டும். அல்லது அந்த தெருவில் யாராவது ஒருவர் வீட்டில் ஒவ்வொரு மணி நேரம் ஒலிக்கும் கடிகார ஓசையின் எண்ணிக்கையை கொண்டு அறிய வேண்டும். இந்த அனுபவம் ஓரளவுக்கு இப்போது உள்ள தலைமுறைக்கு தெரிந்திருக்கும்.

எனக்கு நினைவில் உள்ளது. எனது தாத்தா கூறியது ஒரு காலத்தில் தெருவில் நல்லது கெட்டது நடந்தால் மணி பார்க்க அவரின் வீட்டுக்கு ஆட்கள் வருவார்களாம் .

இப்போது வீட்டிற்கு மூன்று நான்கு கடிகாரங்கள். அதுபோக செல்போனில் ஆட்டோ அப்டேட் டைம் நமக்கு கிடைக்கிறது.

அது போலத்தான் மணிபார்க்கவே அப்படி இருந்தால் தேதி கிழமை பார்க்கவும் அதே போலத்தான். அனைவருக்கும் எளிதாக அதை அறிய எந்த வசதியும் இல்லாததால் அவர்கள் சந்திரனை வைத்து ஓரளவுக்கு நாட்களை உணர்ந்தனர். ஆனால் இப்போது வருடம் பிறந்தவுடன் கடைகடைக்கு இலவசமாக காலெண்டர்கள் வீட்டை நிறப்பிவிடுகிறது. எனக்கு ஞாபகம் உள்ளது நான் சிறு வயதில் இருக்கும் போது பள்ளியில் காசு சேகரித்து குடம் டம்ளர் மூடி காலெண்டர் வாங்குவோம்.

எனது அப்பா உடன் சென்று பணம் கொடுத்து காலெண்டர் வாங்கி வந்ததும் நினைவில் உள்ளது. பலர் வீடிகளில் அதை வாங்க பணம் வேண்டும் என்பதால் காலெண்டர் இல்லாத வீடுகள் கூட நான் பார்த்துள்ளேன்.

சரி விஷயத்துக்கு வருவோம்.

திதி என்பது இது போல அன்றைய காலகட்டத்தில் காலத்தை தெரிந்து கொள்ள உதவும் ஒரு முறை.

திதி என்பது சந்திரனின் #தினகதி என்ற வார்த்தையின் மருவிய சொல். அதை வழக்கில் #திகதி என்றும் அதுவும் கூட மருவி தேதி எனவும் மாறிவிட்டது . ஆங்கிலத்தில் கூட தே-DA, தி-TE = DATE என்று உள்ளது.

தினமும் சந்திரன் அடையும் கதியை கூறும் கணக்கு தினகதி- திதகி – தேதி – திதி

திதி என்பது காலத்தை அளக்க உதவும் ஒரு அலகு

இந்த அலகு சந்திரனை வைத்து அறிய படுகிறது.

சந்திரனின் நிலை சூரியனின் ஒலி பிரதிபலிப்பால் நிகழ்கிறது.

சந்திரன் நகர்ந்து கொண்டே இருப்பதால் சந்திரன் மீது படும் ஒளியின் பிரதிபலிப்பை நாம் வெவ்வேறு கோணத்தில் இருந்து பார்ப்பதால் அது தேய்ந்து வளர்வது போல தோன்றுகிறது.

சூரியன் ஒளி எப்போதுமே பாதி சந்திரனின் மேல் விழுந்து கொண்டேதான் உள்ளது. ஆனால் நாம் வெவ்வேறு பக்கம் இருந்து பார்ப்பதால் மாறி மாறிக் காட்சி தருகிறது .

சூரியனை பூமி மொத்தம் 360 பாகையை சுற்றி வரும் போது அதாவது 365.24 நாட்களை கொண்ட வருடத்திற்கு 12 பெளர்ணமி நிகழ்கிறது . எனவே ஒரு பெளர்ணமி முதல் அடுத்த பெளர்ணமி வரை உள்ள காலத்தை முழு நாட்களாக பிரித்தால் 30 நாட்கள் வரும். நாட்கள் என்பதை விட தினம் என்று கூறுவதுதான் சரி.

மேலும் இங்கு ஒரு கேள்வி எழலாம் சந்திரன் பூமியைச் சுற்றி வர 27.34 நாட்கள்தானே ஆகிறது பிறகு எப்படி 30 நிலை வரும் என்று. பூமியும் நகர்ந்து கொண்டே இருப்பதால் நமது பார்வையில் சூரியனும் நகர்வது போல தோன்றுகிறது. அவ்வாறு நகரும் சூரியனின் ஒளியை வேகமாக நகரும் சந்திரன் பிரதிபலிக்கிறது எனவே அது 30 நாட்களாக நமக்கு தெரிகிறது. அந்த மீத மூன்று நாட்கள் சூரியனின் நகர்வால் சந்திரனுடையது போல நமக்கு தெரிகிறது

இவ்வாறாக நம்மை சந்திரன் 360 பாகையை கடந்து வரும் பாதையில் 12 பவுர்ணமி நிகழ்வதால் 30 தினம் என வைத்து 360/30= 12°என ஒவ்வொரு 12 பாகைக்கும் ஒவ்வொரு திதி. அதாவது தினமும் நடக்கும் சந்திரன் கதி – தினகதி இது சூரியனை சார்ந்து நிகழ்வதால்

சந்திரனுடைய பாகையில் இருந்து சூரியனின் பாகையை கழித்தால் கிடைக்கும் ஒவ்வொரு 12 பாகையும் ஒவ்வொரு திதி

பிரதமை துவங்கி சதூர்தசி வந்து பெளர்ணமி யாகவும் மீண்டும் பிரதமை துவங்கி சதூர்தசி வந்து அம்மாவாசையாகவும் சுழற்சி முறையில் பிரித்து அறிகிறோம் இந்த பெயர்கள் எதோ மந்திரச் சொல் அல்ல. சமஸ்கிருத தினிப்பால் வந்த சொற்கள்

பிரதம என்றால் ஒன்று
துவி (தோ) -2
திரி (தீன்) -3
சதுர் (சாட்) -4
பஞ்ச (பாஞ் ) -5

இது போல 14 நிலைகளுக்கு பதினான்கு வரை உள்ள சமஸ்கிருத எண்களை திதிகளுக்கு பெயராக்கி விட்டனர்

மேலும் பூரணை என்ற தமிழ் சொல் சமஸ்கிருத்திலும் பூர்ணிமா என்றும்

அமைவதை என்ற தமிழ் சொல் அம்மாவாஸ்யா என்றும் வழங்ஙபடுகிறது

பின் வந்த தமிழ் ஆதரவாளர்கள் தமிழ் படுத்துவதாக நினைத்து தமிழுக்கே தமிழ் படுத்தி.

பூரணையை நிறைமதி என்றும்
அமைவதையை மறைமதி என்றும் அழைத்தனர்.

இதில் இறந்தவருக்கு. திதி என்பது பழைய கால நினைவு தினம் மட்டுமே ஏனெனில் அப்போது ஆங்கில காலெண்டர்கள் இல்லை தமிழில் காலெண்டரே இல்லை அவர்கள் திதியை குறித்து வைத்தனர் அதை ஒட்டிய சாங்கியங்கள் இடைசெருகள் மட்டுமே.

திதி என்பது முற்கால தினகதி என்ற காலெண்டர் சிஸ்டம் அதை நடைமுறையில் தற்போது உள்ள காலெண்டர்கள் பின்னுக்கு தள்ளி விட்டன . நமக்கு விவரம் போதாமையால் நாமும் அதை கண்டு குழப்பம் அடைந்து சம்பிரதாயம் சாங்கியம் என பின்னடைந்து விட்டோம்.

பெற்றோர்களை தன்னால் இயன்ற வரை நல்லபடியாக பார்ப்பவர்கள் எந்த திதியும் தரத்தேவையில்லை. திதி கொடுக்காதது பற்றி கவலைபடவும் தேவையில்லை.

மேலும் திதி என்பது கால அளவீட்டு அலகு மட்டுமே. நமக்கு வாழ்க்கை மீது அதிகமான பயம் எனவே புரியாத சொற்களுக்கு பூஜை செய்து பழகிவிட்டோம்

அவரவர் செய்த பாவ புண்ணியம் வைத்து அடுத்த சென்மம் கிடைக்கும் எனில் நாம் கொடுக்கும் திதியால் முன்னோர்களுக்கு எந்த பயனும் இல்லை. ஒரு வேளை பயன் இருந்தால் நாம் செய்யும் பாவ புண்ணியம் வைத்துதான் அடுத்த சென்மம் என்பது முற்றிலும் பொய்யானது நமக்கு இரண்டின் மீதும் ஒரே நேரத்தில் நம்பிக்கை உள்ளது. இது சமூகத்தால் வந்த கோளாறு.

எனவே இது ஒரு காலத்தை அளக்கும் ஸ்கேலில் உள்ள அலகு மட்டுமே

கா பா.

Life….

அனைத்து கருத்துருக்களும், அனைத்து வழிதுறைகளும், அனைத்து குறிக்கோள்களும், நமது ஆழ்மனதில் உள்ள நிலைகளில் மீது கண்டனம் செய்து கொண்டே உள்ளன, அவை தொடர்ச்சியான நம்மை குற்றவாளிகளாக்கி, உண்மைக்கு உவமானமாக யாராவது ஒருவரை முன்நிறுத்துகின்றன, நம்மை அறியாமலே நம்மை குற்றவாளி ஆக்குவதே அவைகளின் பணி ,

தொடர்ச்சியான குறிகோள்களை இலக்காக்கி கொண்டும், நமது சுயதன்மையை கண்டனம் செய்து கொண்டும், யாராவது ஒருவரை போல மாறிவிட உந்தமளித்து கொண்டே உள்ளது,

ஆக மொத்தத்தில் நாம் நாமாக வாழ இங்குள்ள வேதாந்த, சித்தாந்த ,போதாந்தங்கள் என்றுமே அனுமதித்து கிடையாது,

எனினும் அவைகளே நமக்கு நம்மை உணர்ந்தும் என்ற போலி விளம்பரம் செய்யபட்டு வலுகட்டயமாக நம்ப வைக்கபட்டுள்ளோம்.

இவைகள் நமது சுயதன்மையை இழக்க செய்பவை

கா பா

யோகம்….

ஜாதகம் என்றாலே ஒரு மசாலா படம் போலத்தான். அதிலும் ஒவ்வொரு யோகமும் கலவை போலத்தான். யோகம்ன ஒடனே சோதிட நூலில் படிச்சதை எல்லாம் நினைவுக்கு கொண்டு வராதீங்க . ஏனா இது வரை வந்த நூல்கள் மொத்த சோதிட நூல்களில் 5% மட்டுமே மற்றவை இன்னும் நூல்வடிவத்திற்கே வரவில்லை.

ஆமங்க நம்மிடம் உள்ளது வெறும் தேய்ந்து போன டயர் மட்டுமே. ஆனால் அதை நாம் ஹார்ட்லி டேவின்சன் பைக் போல நினைத்து கெத்து காட்டுறோம்.

சரி விசயத்துக்குள்ள போகலாம்.

யோகம் அப்படினா இணைவு என்ற தமிழ் சொல்லுக்கான சமஸ்கிருத வார்த்தை என முதலில் புரிந்து கொள்ளுதல் அவசியம்.

ஒரு கிரகம் மற்றொரு கிரகத்துடன் இணைதல் யோகம்.

அது ஒரே கட்டத்தில் இணைய வேண்டும் என்பது இல்லை.

கோளம் மற்றும் வட்ட கணிதங்களில் குறிப்பிட்ட பாகைபுள்ளிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

அதன்படி
1,4,7,10 அதாவது 90° இணைவு இதை கேந்திரம் என்பார்கள் தமிழில் மத்திய என்று பொருள்

இது போல பல திரிகோணம் 120° . மேலும் வெவ்வேறு பாகைகள் முக்கியதுவமானவை. இவை ஒன்றுக்கொன்று இணையான புள்ளிகளாக கணித ரீதியாக கருதபடுவதால்.

ஒரு கிரகத்தில் இருந்து குறிபிட்ட வீட்டில் உள்ள கிரகமும் கூட இணைந்து யோகமென அழைக்கபடுகிறது.

மேலும் யோகம் என்பது அதிர்ஷ்டம் என்ற சொல்லின் இணை சொல்லைப் போலவும் பரப்பபட்டுள்ளது.

குலநாச யோகம். கூட்டுமரண யோகம். தரித்திரிய யோகம். மாரக யோகம். வேசி யோகம் என பல யோகங்கள் சோதிடத்தில் அதிகமாகவே உள்ளது.

எனவே யோகம் என்பது பற்றி குழப்பம் வேண்டாம்.

ஒரு கிரகம் மற்றொரு கிரகத்துடன் ஏதோ ஒரு விதியின் படி இணைவதால் அது தரும் பலன்களை முன் கூட்டியே யூகித்து ரெடிமேட் ஆன்ஸராக வைத்துள்ளனர் இது சோதிடரின் வேலைபளுவை குறைக்கத்தானே ஒழிய ஜாதகருக்கு எந்த பயனும் இல்லை.

குறிப்பாக ஒவ்வொரு யோகமும் நன்மையை மட்டுமோ அல்லது தீமையை மட்டுமோ செய்வது இல்லை. இரண்டையும் சேர்த்துதான் செய்கிறது.

உதாரணமாக

குரு சந்திர யோகம் என்ற பெயரிலேயே தெரிந்திருக்கும் இது குருவும் சந்திரனும் இணைவதன் பலனை கூறுவது என

குரு சந்திரன் இணைவு.

ஜாதகருக்கு கண்ணியமிக்க தாயை அளிக்கும். சமூகத்தில் தாயால் புகழ் உண்டு. ஜாதகரும் கற்பனை வளம் மிக்கவர். உலகை ஒரு முறை வலம் வந்து ரசித்து விட வேண்டும் என்று ஆவல் கொண்டவர். இசை இயல் நாடகம் மீது ஆலாதி பிரியமுடையவர். மதிப்பாக வாழ விரும்பும் நபர் இன்னும்……

அதே நேரத்தில் ஜாதகருக்கு அவ்வப்போது அவமானங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும் . சிறிய சிறிய பிரச்சினைகளால் பல முறை அவமானமடைந்து மனமுடைந்து ஒதுங்கி நிற்க வேண்டும் என்று முடிவெடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார். ஜாதகருக்கு அவ்வப்போது அப்படி இப்படி ஆசைகள் வந்து கொண்டே இருக்கும்.

என இரு வேறு விதமாக பலன் கிடைக்கும்.

எனவே உங்கள் ஜாதகத்தில் யோகம் அதிகமாக இருப்பதால் அதிர்ஷ்டம் என நினைத்து நம்பி அதை எதிர்பார்த்து. சுயமாக முயற்சி செய்யாமல் அதிர்ஷ்டத்தை நம்பி ஏமாற்றம் அடைய வேண்டாம் .

கா பா.

Adernal ….

அட்ரினல் பரவலாக பேசப்படும் வார்த்தை. அதைபற்றி டெக்னிக்கல் அஸ்பெக்ட்ஸ் உங்களை போலவே எனக்கும் தெரியாது. ஆனால் அது எதற்காக பேசப்படுகிறது என்ற அதன் உள்ளார்ந்த கருத்து அனைவருக்கும் தெரியும்.

அட்ரினல்ன்றது நம்ம உடம்புக்குள்ளயே இருக்குற ஒரு டாஸ்மாக்.

அதை தூண்டுனா ஒரு கிளர்ச்சி வரும். நமது மூளை அதை அவ்வப்போது தூண்ட ஆர்வத்தைக் காட்டும்.

சரி அந்த டாஸ்மாக் எத்தன மணிக்கு திறக்கும். அதுக்கு டைம்லாம் இல்ல.

சராசரியாக அனைத்திலும் நமக்கு ஒரு லிமிட்டேசன் இருக்கும். அது ஆனந்தமோ. துக்கமோ ஒரு எல்லை இருக்கும். அந்த எல்லையை கடந்து சூழல் அமையும் போது அந்த சூழலில் இருந்து உங்களை வெளியேற்ற உங்களை உள்ளிருந்து ஒரு விசை தூண்டும்.

நீங்கள் அதிலிருந்து வெளியே வந்து விடுவது ஒரு செயல். ஆனால் அந்த செயலின் போது உங்களின் உடல் அடைந்த ஒரு வித கிளர்ச்சி உங்களின் மூளையை போதையாக்கி புத்துணர்ச்சி அடைய செய்வதால்.

இப்போது உங்கள் மூளை அந்த போதைக்கு ஏங்க துவங்கும். அதற்காக நீங்கள் எல்லையை கடக்க வேண்டிய ஆசையை உருவாக்கும்.

இதுனு இல்லை எல்லா செயல்களிலும் உள்ள எல்லையை கடக்கும் போதும் இது நிகழும். பயம். ஆனந்தம். காமம். கோபம். வஞ்சகம். ஏமாற்றுதல். என எதுவானாலும்.

இப்போது நீங்கள் இரண்டு விசயத்தில் சிக்கி கொள்கிறீர்.

அதாவது எல்லையை கடக்க வேண்டும். எதற்காகவெனில் நமக்கு போதை வேண்டும். அதே நேரத்தில் எல்லையை கடக்க விடாமல் தற்காப்பு உணர்ச்சி உங்களை பாதுகாத்து அந்த எல்லையை கடக்க விடாமல் பயத்தையும் உண்டு பன்னும்.

ஆக நாம் அந்த கிளர்ச்சி போதையை அனுபவிக்கும் எல்லையை தாண்டி நமது பய உணர்வை தள்ளி செல்ல வேண்டும். என்ன செய்வது. வடிவமைக்கலாம்.

அம்யூஸ்மெண்ட் பார்க் போல. பாம்பாட்டி போல. கயிறு மேல் நடந்து வித்தை செய்வது போல. மலையேற்றம் போல.

நினைவுள்ளதான்னு தெரியல குழந்தைகளை தூக்கி போட்டு பிடிக்கும் போது பயந்து விட்டு பிறகு சிரிக்கும். யானையின் மேலே சவாரி வரும் பொது அழுது கொண்டே சிரிக்கும். இது போல நெரய உள்ளது. சரி இந்த பதிவு எதற்காக.

வாங்க பேசலாம்.

உங்கள் இது போன்ற கிளர்ச்சி பரவசம் செயல்களால் வர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. உங்கள் சிந்தனையை ஒரு எல்லையை கடக்க வைப்பதன் மூலம் இதை அடையளாம்.

ஒருவரிடம் அவரது தொழில் முற்றிலும் அழிந்து விட போகிறது என கூறினால் சடாரென அச்சம் ஒரு எல்லையை கடக்கும் அப்போது ஒருவித கிளர்ச்சி உள்ளிருந்து உந்தம் அளிக்கும். அந்த அச்சத்தில் இருந்து நீங்கள் மீள்வதற்கு ஒரு நிமிடம் ஆகலாம். ஆனால் இப்போது உங்களுக்கு ஒரு புதியதொரு சிக்கல் வந்துள்ளது. அப்போது ஏற்பட்ட கிளர்ச்சியை உங்கள் மூளை அனுபவித்து விட்டது. இனி அதை மீண்டும் கேட்கும். நீங்கள் அந்த வார்த்தையை மீண்டும் கேட்க வேண்டும். ஆனால் உங்கள் மனமோ அந்த வார்த்தையை அதாவது உங்கள் தொழில் அழிந்து விடும் என்ற வார்த்தையை நம்பகமான ஒருவர் சொல்ல வேண்டும். உங்கள் நண்பர் கூறினால் உங்கள் மனம் அதை ஏற்காது. அதை ஒரு ஜோதிடர் சொன்னால்.

உங்களுக்கு வாழ்க்கை பற்றி அச்சம் அதிகமாகும் மீண்டும் கிளர்ச்சி கிடைக்கும். இப்போது நீங்கள் மீண்டும் அந்த ஜோதிடரை நாடுவீர்கள். அவர் இன்னும் ஒரு எதிர் மறை பலனை கூறவேண்டும் இல்லாவிட்டால் நீங்கள். அது போல ஜோதிடரை தேட ஆரம்பித்திருப்பீர்.

உங்களுக்கு வாழ்க்கை எப்படி நடக்க போகிறது என தெரியாது அதனால் சோதிடரை நாடுவீர்கள். அவர் சொன்னது உங்களுக்கு த்ருப்தி இல்லாவிட்டால் அவர் சரியில்லை என முடிவு செய்து விடுவீர்கள். யோசித்து பார்க்க முடிகிறதா. தெரியாத எதிர் காலத்தில் நடப்பனவற்றை அறிய போன இடத்தில் உங்கள் மனம் அதுவாக ஒரு தளத்தை அமைக்கிறது. அது இப்போயது தெரியாத வாழ்க்கையில் இருந்து விரும்பிய வாழ்க்கையை கூற வேண்டும் என முடிவு செய்கிறது. அதிலும் உங்கள் உள்ளூர கிளர்ச்சி பரவசத்தை தூண்டும் வார்த்தைகளை அது தேட துவங்குகிறது.

குரு சனி உண்ணதமானது எனக்கூறினால் உங்களுக்கு திருப்தி கிடைக்காது. ஆனாலும் உங்களுக்கு சோதிடமும் தெரியாது குரு சனி என்ன செயலாற்றும் எனவும். நடைமுறையில் அந்த இணைவால் பலர் அடைந்த வெற்றியும் தெரியாது. இருந்தாலும் அதை பிரம்மஹத்தி தோசம் என சொன்னவுடன் உங்களுக்கு கிளர்ச்சி துவங்கி விடும். இப்போது உங்களுக்கு தீர்வு கிடைக்கிறதோ இல்லையோ பரவசத்தை தேடும் உங்கள் மூளைக்கு கிளர்ச்சி கிடைத்து விட்டது. இதனாலேயே உங்கள் ஜாதகத்தில் எதாவது தோசம். சாபம். பாவம். கர்மா குறைபாடு என கூறுவதை உங்களை அறியாமலேயே நீங்கள் மயக்கமடைகிறீர்கள்.

சரி கிளர்ச்சி கிடைக்கிறது சரிதான். நல்லதுதானே.

ஆனால் உங்கள் மனம் வார்த்தைகள் அளித்த கிளர்ச்சியை செயல் வடிவம் வழங்கி அதிலுள்ள கிளர்ச்சியை அடைய நகர்ந்து கொண்டே இருக்கும். உங்களுக்கு தெரியாமலேயே அதை செய்து ஒரு நாள் உண்மையாக மாற்றி அதில் பரவசமடையும்.

பாம்பு என்றால் உங்களுக்கு பயம். ஆனால் பாம்பு என யாராவது கத்தினால் அந்த பாம்பை நீங்கள் பார்த்துவிட ஆர்வம் கொள்வதற்கு காரணம் இதுதான். எதாவது விபத்து நடந்திருந்தால் அங்கு சென்று எட்டிப் பார்த்து விட்டு யாராவது இறந்துள்ளார்களா என ஆவல் கொள்வது இதுதான்.

ஒருவர் செய்திதாளில் ஒரு வீட்டில் நடத்த திருட்டு அல்லது ஒரு பெண்ணின் நடத்தை குறித்த செய்தியை படிக்கிறார். அவர் அந்த செய்தியை தன்னுடைய வாழ்வுடன் ஒப்பிட்டு ஒரு வித கலக்க உணர்வை மூளைக்கு செலுத்துகிறார் உடனே மூளை கிளர்ச்சி அடையும். இனி அவர் எப்போது செய்தி தாளை திறந்தாலும் அப்படி பட்ட செய்தியை கண்கள் அவரையே அறியாமல் தேடி அச்சமூட்டி கிளர்ச்சி கொள்ளும்.

இது ஒரு வகை சைக்கோதனம்தான் அளவைகடக்கும் போது.

எனவே நீங்கள் எங்காவது தோசம் .சாபம். பாவம் கர்மா. குர்மா. என விசயங்கள் மீது ஆர்வம் வைத்து அதை தொடர்ந்து படிக்க உங்கள் மூளை உள்ளிருந்து தூண்டினால் உங்களுக்கு நீங்களே எச்சரிக்கை செய்து கொள்ளுங்கள். அது உண்மையாகவே நடந்து விட நீங்கள் பாதையை ஏற்படுத்தி கொண்டு உள்ளீர்கள். நீங்கள் சைக்கோவின் மிக நெருங்கிய நிலையை நெருங்கி கொண்டு உள்ளீர

்கள் என.

உங்களை சுற்றி நீங்கள் நம்பி கொண்டுள்ளவற்றில் பெரும்பாலானவை இவைதான்.

Change the Thought

உங்கள் வாழ்க்கை மாற்றம் அடைய நீங்கள் விரும்பினால். உங்கள் சிந்தனைகளை முதலில் மாற்றுங்கள். வாழ்க்கை என்பது சிந்தனைகளின் தொகுப்பு மட்டுமே. நீங்கள் நிரப்பி வைத்துள்ள சிந்தனைகள் வாழ்க்கையாக காட்சியளிக்கிறது. தற்போது உள்ள சிந்தனையே தற்போதைய வாழ்க்கை. இந்த வாழ்க்கை அடுத்த கட்ட நகர்வை சந்திக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் உடனடியாக சிந்தனையை மாற்றுங்கள். உடனடியாக வாழ்க்கையும் மாறிவிடும்.

Influence of others in Everybody Life @#$% !!!

ஜாதகர் என்ன முடிவுக்கு வர வேண்டும் என்று ஜாதகரை சார்ந்தவர்கள் கேட்டு தெரிந்து கொள்கிறார்கள். இது ஒரு ஆளுமை தொடர்பான சிக்கல். பெரும்பாலான தாய்மார்கள் இதை செய்கிறார்கள். பல முறை கவணித்துள்ளேன் ஜாதகரின் சிக்கல் மீது எதாவது ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று பெற்றவர்கள் சிரத்தை எடுக்கிறார்கள் குறிப்பாக தாய்மார்கள்.

ஆனால் இவர்கள் சொல்வதை அவர்களின் பிள்ளை கேட்டவே இல்லை என்பதே பிரதான சிக்கல் என்பதை மறந்து விட்டு அதை சரி செய்ய முயல்கிறார்கள். எனது மருமகள் குடும்ப நிம்மதியை கலைத்து விட்டாள் எனது மகனும் அவள் மீது கோபமடைகிறான் என இவர்களாகவே ஒரு முடிவுக்கு வந்து அந்த சிக்கலில் தீர்வு தருவதை போல நினைத்து ஆலோசனை கூறவும் அதையும் கடந்து இறங்கி சிக்கலை சரி செய்ய வேண்டும் என்ற விருப்பத்திலும் செயல்படும் நேரத்தில் குடும்பத்தில் நடக்கும் சிறிய சிக்கலைக் கூட ஊதிஊதி பெரிதாக்கி அதில் மைத்யஸ்தம் செய்ய இவர்களாகவே பொறுப்புகளை எடுத்துக் கொண்டு உதவி செய்வதாய் நினைத்து இடையூறாக இருக்கிறார்கள் என பிள்ளைகளே கருதும் அளவுக்கு சூழல் மாறிவிடுகிறது.

பிறகு பிள்ளைகளிடம் பெயரளவில் மரியாதை மட்டுமே கிடைக்கும். அவர்கள் இவர்கள் சொல்வது போல நடக்க வேண்டும் என்ற எண்ணம் குடும்பத்தில் தொடர்ச்சியாக பிரச்னைகளை ஏற்படுத்தி தீராத எரிச்சலுணர்வை ஏற்படுத்தி. பிள்ளைகள் இவர்கள் பேச்சுக்கு முன்னுரிமை வழங்குவது குறைகிறது.

இது ஒரு தாழ்வு மனப்பான்மையை பெற்றோர்களுக்கு ஏற்படுத்தவே அதை ஈடு செய்ய சோதிடர்கள். கோயில்கள். உறவுகள் என அனைவரிடமும் தனது பிள்ளை குடும்பம் நடத்த மிகவும் கஷ்டபடுவதாகவும் அதில் இருந்து வெளியே வர ஏதாவது செய்ய வேண்டும் என்றும் இவர்களாகவே ஒரு புதிய பிரச்சனையை கையில் எடுத்துக் கொண்டு விடை தேடி வலம் வருகிறார்கள்.

இது பிள்ளைகளிடம் அங்கீகாரம் இல்லாத போது தனது மனதை தானே ஏமாற்றிக் கொள்ள. அவர்களாகவே அவர்களுக்கு குடும்பம் நம்மால்தான் நடக்கிறது என்று கூறி ஆசுவாசபடுத்த எடுக்கும் ஒரு வித முயற்சி மட்டுமே.

ஏனெனில் இந்த பெற்றோர்கள் தனது பிள்ளைகளை திருமணம் செய்து கொடுத்தாலும். அவர்களை தனது சொத்தாகவே பார்க்கிறார்கள். அவருக்கு வந்த துணை அந்த சொத்தை பங்கு போட இவர்களால் விட்டு கொடுத்து போக முடியவில்லை.

அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.

நான் உன்னோட வயசெல்லாம் தாண்டிதான் இங்கே வந்து உள்ளேன் என அனைத்துக்குமே கூற வேண்டும். நீங்கள் திருமணம் செய்து கொண்ட பின்பு உங்கள் தாய் தந்தையர் எவ்வளவு எல்லை வரை குடும்ப விசயத்திற்குள் வர வேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்களோ அந்த எல்லையை நீங்கள் இப்போது கடந்து செல்ல தயாரானதால் வந்த சிக்கல் இது. ஏனெனில் உங்கள் பிள்ளைகளும் இந்த எல்லையை வைத்து இருப்பார்கள்.

பொதுவாகவே நாம் குழப்பமாக வாழ்க்கையை நடத்துகிறோம்.

நம்மிடம் எதுக்குப்பா இவ்வளவு கஷ்டபட்டு சம்பாரிக்கிறேனு கேட்டா பொண்டாட்டி புள்ளைகளுக்குதாங்க. எனக்குனா நான் சாலை ஓரத்தில் கூட தூங்கிட்டு வாழுவேங்க. அப்படினு சொல்லுவோம். நாம மட்டும் இல்லை. எல்லோரும் இதே போலதான் . ஆனால் பிள்ளைகள் திருமணம் ஆன ஒடனே எதாவதுனா என்னைய ஏமாத்தி புடுக்கிட்டாங்கனு சொல்லுவோம். அவங்களுக்குதான எல்லாத்தையும் சம்பாதித்தோம். எடுத்துக்க எனக்கெதுக்குனு எந்த பெற்றோர்களும் சொல்றது இல்ல. திருமணம் ஆன ஒடனே எல்லாம் கணக்கு வழக்குல வந்து விடுகிறது. எதாவது கேட்டா வந்தவள் சொல்லி கொடுத்து புடுங்க பாக்றானு சொல்ல துவங்கிறோம்.

இதுல யார் சிக்கலாக இருக்கிறார்கள் என அவரவர் புரிந்து கொண்டாலே போதும்.

அவரவர் எல்லையை உணர்ந்து கொண்டாலே போதும்.

பேரன். பேத்தி பொறந்ததுக்கு ரெண்டு பவுன்ல செய்ன் போட்டோம்னு ஏன் பெருமையா பேசனும். மொத்த சொத்தே பேத்திக்கு ஏன் மறந்து விட்டது.

பிள்ளைக்கு இவ்வளவு நகை. கார். செலவுனு ஏன் பேசனும் மொத்தமா நாம சம்பாரித்தது எல்லாம் அவங்களுக்குதான்னு நினைக்கின்ற பெரிய மனம் எங்கே தொலைத்தோம். என

தனது நிலையை எல்லா நிலைகளிலும் இருந்து சிந்தித்தால் பல குடும்பங்கள் சிக்கலில்லாமல் வாழும்.

Photo by Tomáš Malčo Malík on Pexels.com

Marriage Is spicy or Honey ….

திருமணம் என்பது பத்து கிலோ மிளகாய் திங்க ஒரு தேக்கரண்டி தேன் பரிசளிப்பது போல ஒரு நகைச்சுவையான விளையாட்டு. 😜😜😜😜😜😜😜😜😜.

ஆனால் சுவைத்து உணரும் வரை உங்களால் எது மிளகாய் எது தேன் என புரியாது. மிளகாய்க்கு தேன் என நீங்கள் பொருளை மாற்றி தெரிந்து வைத்திருப்பீர்கள்.

Photo by Deesha Chandra on Pexels.com

How to Grow Cow in Cattle ……….

நீங்கள் மாடு அல்லது ஆட்டு பண்ணை வைத்திருந்தால். அல்லது துவங்க திட்டமிட்டிருந்தால். 

உங்கள் மாடுகள் உள்ள கொட்கையில் அவைகள் வடக்கு அல்லது தெற்கு நோக்கி நிற்குமாறு அமைக்கவும். 

இது அவற்றின் நிம்மதியான உறக்கம். ஜீரணம். ஆரோக்கியத்தை வழங்கும். எனவே பால் உற்பத்தி நிறைவைத் தரும். 

தினமும் குளிப்பாட்டுவதால் பால் உற்பத்தி பெருக்கம் அடையும். 

இதற்கு காரணம் சூரியன் மற்றும் சந்திரன் . நீங்கள் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டு கவனித்து பாருங்கள் இயற்கையாகவே அது மேயும் போதும் அசைபோடும் போதும் ஓய்வெடுக்கும் போதும் வடக்கு அல்லது தெற்கு நோக்கியே இருக்கும்