Issues With Saturn …

ஏழரை சனி தாக்கத்தை குறைக்க இரவு ஏழரை மணிக்குள் இரவு உணவை எடுத்துக் கொள்ளவும்.

தினமும் இரவு ஒன்பது மணிக்கு ஐந்து கருப்பு உலர்ந்த திராட்சை உண்டு வர ஏழரை சனி நல்லதுதான் செய்யும்

Gents – Growing Nails in Little Finger ……..

ஆண்கள். உங்கள் சுண்டு விரல் நகங்களை பெரிதாக வளர்ப்பதை தவிர்க்கவும் .

சொத்து தொடர்பான வில்லங்கங்கள். சில சமயங்களில் சொல்லவருவதை சரியாக சொல்ல முடியாமல் போவது. பெண்கள் வழியாக விரையங்கள். மகளுடன் சொத்து தகராறு. கணக்கு வழக்குகளில் குளறுபடிகள் .இரத்த அழுத்த நோய்கள். வறுமை. கடன். மரியாதை குறைதல் etc……

இது போல பல போராட்டங்களை தவிர்க்கலாம்.

உயர்ந்த நிலையில் உள்ள அறிவு பழைய பாதைகளின் ஊடே பயணிப்பது கிடையாது. அறிவானது அவ்வாறு புதிய பரிணாமம் அடையும் போதே இதுவரை சமூகம் அறிந்திராத ஒரு புதுமையான கருத்து பிரதேசங்களை மக்களுக்கு அறிமுகம் செய்கிறது.

  • கா பா
Photo by Element5 Digital on Pexels.com

Knowledge on heights

Panchangam Insight

பஞ்சாங்கம் –

பஞ்சாங்கம் என்பது வானியல் ஆய்வு கூற்றின் அடிப்படையில் கிடைத்த தரவுகளையும், பண்டைய மனிதர்களின் வாழ்வியல் கால கணித அடிப்படை தகவல்களையும் , ஒருகினைத்து உருவாக்கபட்ட வானியல் நகர்வுகளை குறிக்கும் கால அட்டவணை, நமது நாட்டிலுள்ள பஞ்சாங்கம் பலதரபட்ட மத நம்பிக்கைகளை (பல்லி விழும் பலன், சொப்பன பலன் போன்ற இன்னும் பல) தாங்கியுள்ளது, அயல்நாடுகளில் இது போன்ற விடையங்களை தவிர்த்து விடுகிறனர்
இது ஜோதிட கணிதத்திற்கும், பன்பாடு, கலாச்சாரம், வெளியிடப்படும் பகுதியின் மதம்சார்ந்த சில நிகழ்வுகளை குறிபிடுவதற்கு பயன்படுத்தபடும் நூல் ஆகும் .

இது ஐந்து விதமான நகர்வு விளைவை சுட்டுகிறது, எனவே ஐந்து என்பதன் வடமொழி சொல்லான பஞ்ச என்ற வார்த்தையின் உதவி கொண்டு பஞ்ச அங்கம் என பெயரிடபட்டது,
இது அதிகமாக சூரியன், சந்திரன் என்ற இருகிரகங்களால் நாம் காணும் வானியல் மாற்றங்களையே உணர்த்துவது.

1. வாரம் ,
2. திதி,
3. கரணம்,
4. நட்சத்திரம் ,
5. யோகம்,

என்பதன் நிலைகளை கூறுவதே பஞ்சாங்கம், இது வருடத்திற்கு ஒருமுறை வெளியிடபடுகிறது, சில நாடுகளில் 12 வருடத்திற்கு ஒரு முறையும், அனேகமான நாடுகளில் எபிமெரிஸ் எனபடும் கிரக நிலை அட்டவனை 100 ஆண்டுகளுக்கு கூட உள்ளது, தற்போது 3058 வரையிலான அட்டவனை கூட கிடைகிறது,

வாரம்

ஆதியிலிருந்து மனித இனமானது காலங்களை குறிப்பதில் வட்டாரம் சார்ந்த பல வழக்கங்களை கொண்டிருந்தனர் , பிறகு பெரும்பாலான நாடுகளில் உள்ளவர்கள் சூரிய உதயத்தின் உதவியுடன் நாள் என்ற ஒன்றையும் அவைகளின் கூட்டுகளை வாரமென்ற அளவிலும் குறித்து கொண்டனர் பிறகு சந்திர நிலைகளை வைத்து சில அளவீடுகளும் உருவாக்கபட்டது, அவற்றை தெரிவிக்க சில குறியீடுகளும் தேவைபட்டது, அதிக குழப்பங்களை சரி செய்து பொதுவான சில முடிவுகளால் தற்போதுள்ள நாள் எனும் 24 மணி நேர கணிதமும், 7 கிரகங்களின் நிலைகளையும் அவற்றிற்கான பெயர்களினாலும் குறிக்கபடுகிது.

இருந்தாலும் தற்போதும் மதங்கள் பழங்கால நம்பிக்கையின் அடிப்படையில்தான் மத சடங்குகளை செய்து கொண்டு உள்ளனர்,

நமது மூதாதையர்களின் காலக்குறியீடு

15 அணு 1 நிமிடம்
60 அணு – 1 கணம்
6 கணம் – 1 நாழிகை
15 கணம் – 1 ஓரை
2½ நாழிகை -1 ஓரை 60 நிமிடம்( 1 மணிநேரம்)
3¾ நாழிகை -1 முகூர்த்தம் (1½ ஓரை)
7½ நாழிகை – 1 சாமம் (3 ஓரை, 2 முகூர்த்தம்)
10 நாழிகை – 1 சிறும்பொழுது (4 ஓரை)
4 சாமம் – 1 பொழுது- 30 நாழிகை
2 பொழுது -1 நாள்
7 நாள் -1 கிழமை(வாரம்)
15 நாள் – 1 அழுவம்(பக்கம்)
30 நாள் – 1 திங்கள்(மாதம்)
48 நாள் – 1 மண்டலம்
2 திங்கள் – 1 பெரும்பொழுது 60 நாள்
6 திங்கள் – 1 அயனம்
2 அயனம் – 1 ஆண்டு
64 ஆண்டு – 1 வட்டம்
4096 ஆண்டு – 1 ஊழி

சூரிய குடும்பத்தில் கோள்களின் வரிசை முறையே,
சூரியன்
புதன்
சுக்கிரன்
பூமி (சந்திரன் துணைக்கோள்)
செவ்வாய்
வியாழன்
சனி
உள்ளது.

இதில்
பூமியின் சுற்றுபாதைக்குள் சுழலுபவை உள்வட்ட கிரகங்கள் எனவும்,
பூமியின் சுற்றுபாதைக்கு வெளியே சுழலுபவை வெளிவட்ட கிரகங்கள் எனவும் பிரிக்கபட்டுள்ளது.

உள்வட்ட கிரகம்

சூரியன்
புதன்
சுக்கிரன்
சந்திரன்

வெளி வட்ட கிரகம்

செவ்வாய்
குரு
சனி

இவற்றை சுற்று கால அளவின் அடிப்படை கொண்டு அதிக சுற்றுகாலத்திலிருந்து இறங்கு வரிசையில் வரிசைபடுத்தி அமைத்து இரண்டு குழுவையும் ஒன்று சேர்த்தால் ஓரை கிரக வரிசைகிடைக்கும்,
அதாவது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் கிரகங்களின் பேரிடுவது,

உள்வட்ட கிரகம்

சூரியன் – 365.25 நாள்
புதன் – 88 நாள்
சுக்கிரன் – 225 நாள்
சந்திரன் -27.329 நாள்

வெளி வட்ட கிரகம்

செவ்வாய் – 1.883 வருடம்
குரு – 11.869 வருடம்
சனி – 29.467 வருடம்

இதை தனி தனியே வரிசை படுத்தி இனைத்தால்
ஓரை கிரக வரிசை வரும்.

சூரியன் – 365.25 நாள்
சுக்கிரன் – 225 நாள்
புதன் – 88 நாள்
சந்திரன் -27.329 நாள்

சனி – 29.467 வருடம்
குரு – 11.869 வருடம்
செவ்வாய் – 1.883 வருடம்

ஓரைகள் வரிசையே இதன்படிதான் குறிக்கபடுகின்றன,

ஒரு நாள் 24 மணி நேரங்களை கொண்டது, அதாவது 24 ஓரைகளை கொண்டது,

ஒரு நாள் சூரிய உதயம் காலை 6.00 -7.00 மணிவரை உள்ள ஓரையின் பெயரிலேயே அந்த தினம் கிழமை என அழைக்கபடுகிறது,

உதா;

சூரிய உதயம் காலை 6.00 -7.00 சூரியன் ஓரை என கொண்டால் அன்றைய தினமானது சூரியகிழமை (ஞாயிற்று கிழமை)
ஆங்கிலத்தில் SUN – DAY,

இனி ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஓரை கிரக வரிசையிலேயே கிரகங்களை அமைத்து பார்ப்போம்.
6.00 -7.00 -சூரியன்
7.00 – 8.00 -சுக்கிரன்
8.00 – 9.00 -புதன்
9.00 – 10.00 -சந்திரன்
10.00 – 11.00 -சனி
11.00 – 12.00 -குரு
12.00 – 13.00 -செவ்வாய்
13.00 – 14.00 – சூரியன்
14.00 – 15.00 -சுக்கிரன்
15.00 – 16.00 -புதன்
16.00 – 17.00 -சந்திரன்
17.00 – 18.00 -சனி
18.00 – 19.00 -குரு
19.00 – 20.00 -செவ்வாய்
20.00 – 21.00 -சூரியன்
21.00 – 22.00 – சுக்கிரன்
22.00 – 23.00 -புதன்
23.00 – 24.00 -சந்திரன்
24.00 -1.00 -சனி
1.00 – 2.00 -குரு
2.00 – 3.00 -செவ்வாய்
3.00 – 4.00 -சூரியன்
4.00 – 5.00 -சுக்கிரன்
5.00 – 6.00 -புதன்

அடுத்து வருவது சந்திர ஓரை ,
அடுத்து வருவது புதிய நாளின் சூரிய உதயம் ,

6.00 – 7.00 -சந்திரன்
அப்படியெனில் இந்த நாள் முதல் ஓரையான சந்திரனின் பெயரால் அழைக்கபடும்,
சந்திர கிழமை( திங்கள் கிழமை)
ஆங்கிலத்தில் – MOON DAY ( Monday )

இவ்வாறு தொடர்ந்தால் அடுதடுத்த தினங்களின் பெயர்கள் வரும், இவ்வாறு ஏழு கிரகங்களை கொண்டு கிழமைகளை வரிசைபடுத்தி, அந்த கிழமைகளை குழுவாக குறிப்பது வாரம்.

திதி

திதி என்பதும் காலத்தை குறிக்கும் அளவீடே,
இதற்கு தமிழில் நாள், நிலை என்ற பொருளுண்டு, சந்திரன் பூமியை சுற்றிவரும் போது சூரியனின் ஒளியை பிரதிபலிப்பதில் ஏற்படும் மாற்றத்தினை குறிப்பெடுத்து கூறுவதே திதி,
சூரியனுக்கும் ,பூமிக்கு இடையே சந்திரன் வரும்போது சூரியனின் ஒளியானது நாம் காணும் சந்திர பகுதியின் பின்புறத்தில் விழுவதால் நமக்கு தெரியும் சந்திரனின் பகுதி இருண்டு காணபடும் இது அம்மாவாசை என கூறபடுகிறது, சூரிய ஒளிபடும் பகுதியை நாம் கானும்படிக்கு சூரியன், பூமி இவற்றின் நடுவில் இல்லாமல் நேர் எதிரில் நிற்கும் போது சந்திரனின் முழு ப்ரதிபலிப்பை கானும் நிலை பௌர்னமி
அம்மாவாசை யில் இருந்தும் ஒளி பிரதிபலிப்பு கூடி கொண்டே செல்வதால் அதிலிருந்து அடுத்து 14 நிலைகளும் வளரும் பிறை என்றும்
பௌர்ணமியில் இருந்தும் ஒளி பிரதிபலிப்பு குறைந்து கொண்டே செல்வதால் அதிலிருந்து அடுத்து 14 நிலைகளும் தேயும் பிறை என்றும்
அழைக்கபடுகிறது.

அம்மாவாஸயை என்பது சூன்யம் எனப்படும் ஒன்றுமற்ற நிலையையும்,
பூர்ண சந்திரன் (பௌர்ணமி )என்பது முழுமையடைந்த நிலையையும்
மற்ற 14 நிலைகளும் இரண்டுக்கும் பொதுவாக பேரிட்டு அழைக்கபடுகின்றன

இவை முறையே ஒருநிலையிலிருந்து தான் கடந்த நிலையின் எண்ணிக்கையை வடமொழி எண்களின் பெயரின் வரிசையிலேயே பெயரிடபட்டுள்ளது. ஹிந்தி எண்களுடன் இனைத்து அறிந்து கொள்ளவும் ,
அம்மாவாசை, பௌர்ணமி இரண்டுக்கும் பிறகு உள்ள நிலைகள் ,வளர்பிறை, தேய்பிறை இரண்டிலும் பெயர்கள் ஒன்றாக உள்ளது,

1. அமாவாசை
2. பிரதமை (வளர் பிறை)
3. துதியை
4. திருதியை
5. சதுர்த்தி
6. பஞ்சமி
7. சஷ்டி
8. சப்தமி
9. அட்டமி
10. நவமி
11. தசமி
12. ஏகாதசி
13. துவாதசி
14. திரயோதசி
15. சதுர்த்தசி
16. பௌர்ணமி
17. பிரதமை (தேய்பிறை)
18. துதியை
19. திருதியை
20. சதுர்த்தி
21. பஞ்சமி
22. சஷ்டி
23. சப்தமி
24. அட்டமி
25. நவமி
26. தசமி
27. ஏகாதசி
28. துவாதசி
29. திரயோதசி
30. சதுர்த்தசி

கரணம் ;
கரணம் என்பது கணக்கு என பொருள் கொண்டது,
நான் முன்பு பார்த்த 30 திதிகளையும் முன் பாதி, பின் பாதி என திதியை இரண்டு கூறுகளாக்கி திதி நிலையை குறிப்பதே கரணம் இது 11 பகுதிகளை கொண்டது,

1 பவ
2 பாலவ
3 கௌலவ
4 தைதூலை
5 கரசை
6 வணிசை
7 பத்தரை
8 சகுனி
9 சதுஷ்பாதம்
10 நாகவம்
11 கிம்ஸ்துக்னம்

இவைகளில் முதல் 7 பொதுவாகவும், பின் 4 சில குறிபிட்ட நிலைகளுக்கு மட்டும் உபயோகபடுத்தபடுகிறது,
திதி, கரணம் இவற்றின் ஒருகிணைப்பால் நாம் சில காலத்தை குறிக்கிறோம்.

நட்சத்திரம் ;

ஏற்கெனவே நாம் பூமியை மைய்யமாக கொண்டு ப்ரபஞ்ச பகுதிகளை 12 மற்றும் 27 பிரிவுகளாக பிரித்து அவற்றிற்கு அந்த குறிபிட்ட திக்கில் நம்மால் காணமுடிந்த சில நட்சத்திர குழுக்கள் பெயரை சூட்டியுள்ளோம், ஒவ்வொரு பிரிவுப் 13.33° அளவை கொண்டது
சந்திரன் பூமியை சுற்றிவரும் போது அது நாம் பிரபஞ்சத்தை பிரித்து வைத்துள்ள எந்த பிரிவில் அது உள்ளது என்பதையும் அந்த பிரிவு எந்த நட்சத்திர பெயரால் அழைக்கபடுகிறது, என்பதையும் விளக்குவது,
பஞ்சாங்கம் நட்சத்திரம் என குறிப்பது ப்ரபஞ்ச பிரிவுகளை இல்லை, அந்த பிரிவுகளில் சந்திரன் பயனிப்பதை மட்டும் குறிக்கிறது,

அஸ்வினி
பரணி
கார்த்திகை
ரோகிணி
மிருகசிரீடம்
திருவாதிரை
புனர்பூசம்
பூசம்)
ஆயில்யம்
மகம்
பூரம்
உத்திரம்
அத்தம்
சித்திரை
சுவாதி
விசாகம்
அனுஷம்
கேட்டை
மூலம்
பூராடம்
உத்தராடம்
திருவோணம்
அவிட்டம்
சதயம்
பூரட்டாதி
உத்திரட்டாதி
ரேவதி

யோகம்;

யோகம் என்பது சூரியன் நிலையையும், சந்திரன் நிலையையும் கூட்டி 13.20° யால் வகுத்தால் கிடைக்கும் நிலையை பிரிவாக்கி குறிப்பதற்கு பெயர் யோகம் என்பது, இது 27 பெயர் பிரிவுகளை கொண்டது.

1. விஷ்கம்பம்
2. பிரீதி
3. ஆயுஷ்மான்
4. சௌபாக்கியம்
5. சோபனம்
6. அதிகண்டம்
7. சுகர்மம்
8. திருதி
9. சூலம்
10. கண்டம்
11. விருதி
12. துருவம்
13. வியாகதம்
14. அரிசணம்
15. வச்சிரம்
16. சித்தி
17. வியாதிபாதம்
18. வரியான்
19. பரிகம்
20. சிவம்
21. சித்தம்
22. சாத்தீயம்
23. சுபம்
24. சுப்பிரம்
25. பிராமியம்
26. ஐந்திரம்
27. வைதிருதி

இவ்வாறு வாரம், திதி, கரணம், நட்சத்திரம், யோகம் என்பதெல்லாம் காலங்களை சூரியன் மற்றும் சந்திரன் நிலைகளை கொண்டு குறிக்கபட்ட கால அட்டவணையே பஞ்சாங்கம், இது காலத்தை மிக மிக துல்லியமாக கணித்து புலம்பெயர்தல், வேளாண்மை, நீர் மேலாண்மை, தூர பயனங்கள் துவங்குதல், காலத்திற்கேற்ப வியாபாரத்தை தேர்ந்தெடுத்தல், போர் தடுத்தல், நோய் தடுப்பு நடவடிக்கைகளென மனித வாழ்வின் கால முன்னேற்பாடுகளுக்காக உருவாக்கபட்ட கால கணித அட்டவனையே பஞ்சாங்கம்.

இதை ஜோதிட துறை நமது தேவைகளுக்காக பயன்படுத்தி கொண்டது, அதில் துறைசார்ந்த விசயங்களையும் இனைத்து கொண்டது, இருப்பினும் வான் பொருள் நகர்வை அடிப்படையாக கொண்ட ஜோதிடதுறைக்கு
கிரகங்களின் தரவுகளை அளிப்பதற்கு பஞ்சாங்கம் மட்டுமே வழிதுறை

மதம்சார்ந்த துறைகளும் நம்பிக்கை அடிப்படையில் வட்டாரம் சார்ந்த பல விசயங்களையும் இனைத்து ,மத நூல்களாகவும் மாற்றிவிட்டனர்.

டெல்லியில் கிடைக்கும் பஞ்சாங்கத்தில்

ஆடி பூர உற்சவம் ; திருவண்ணாமலை திரு அம்பாள் ப்ரமோச்சவ தீர்த்தம் என குறிப்புகள் இருக்காது
ஆனால் வாரம், திதி, கரணம், நட்சத்திரம், யோகம் இருக்கும்

பஞ்சாங்கம் மொத்தம் 10 பக்கம்தான் முற்பகுதியில் மதம் 50 பக்கத்தை இனைத்து கொண்டது, ஜோதிடம் தன் பங்கிற்கு பின்னால் 40 பக்கத்தை இனைத்து கொண்டது, மொத்தம் 100 பக்கமானது,

10% மட்டுமே பொதுவானது மற்றவை வட்டாரவழக்கில் உள்ள நம்பிக்கை மட்டுமே.

உங்களன்பு ஜோதிடன் கா பா

Eclipse is a Mystery…

ஒரு மனிதன் சராசரி ஆயுட்காலம் அதுவும் குறிப்பாக இந்தியர்களுக்கு 67 ஆண்டுகள்.

அதில் அதிகபட்சமாக 7முறையும் குறைந்த பட்சமாக 4 முறையும் ஆண்டுக்கு கிரகணம் நடக்கும் சூரியன் மற்றும் சந்திர கிரகணம் இரண்டும் சேர்ந்து ஆண்டுக்கு சராசரியாக 5 எனக் கொண்டால்

ஒரு மனிதன் தனது வாழ்நாளில் 67 × 5 =335 கிரகணம் நிகழ்கிறது.

அதில் பாதி இந்தியாவில் இருந்து பார்க்க இயலாது போனாலும் கூட மொத்தமாக 170 கிரகணங்களை நாம் கடக்கிறோம். இது இயற்கையான ஒரு சாதாரண நிகழ்வு மட்டுமே. உங்கள் ஊரில் வெயிலுக்கு ஒதுங்கும் ஒரு மர நிழலைப் போல ஒரு நிழல் இதில் கதிர் வீச்சு மாற்றம் அடைவது சரிதான். எந்த ஒளியானாலும் எந்த ஒரு பருப்பொருளின் விளிம்பு வழியே விலக்கமடைந்து அதன் வீச்சில் மாறத்தான் செய்யும். நீங்கள் மரத்தின் நிழலில் நிற்கும் போது கூட கதிர் வீச்சு நடந்து கொண்டே உள்ளது என்பதை புரிந்து கொள்ளவும்.

மேலும் நாம் நமக்கு தெரியாமல் சனி. குரு. செவ்வாய். சுக்கிரன். புதன் போன்ற கிரகணங்களையும் கடந்து கொண்டேதான் இருக்கிறோம். நமக்கு அது நடப்பதற்கான குறிப்பு நாட்காட்டியிலே செய்திதாளிலோ வரவில்லை அவ்வளவுதான். அதில் இல்லை என்பதால் மட்டும் நடக்காமலா போய்விடும். நமக்கு தெரிந்ததற்கு அச்சமடைகிறோம். ஒரு வேலை அது அச்சமடையக் கூடிய அளவுக்கு ஆபத்தானது எனில் மற்ற கிரக கிரகணங்களை எப்போது கண்டறிந்து ஓடி ஒளிந்து கொள்ளப் போகிறோம்.

அதைவிட கவணிக்க வேண்டியது நீங்கள் ஒளிந்து கொண்டதால் மட்டும் கதிர்வீச்சு தாக்கம் நடக்காதா என்ன. ஆழ்கடலில் உள்ள மீனுக்கு சூரியன் சக்தியை வழங்கும் போது 4½ ” கான்கிரீட் உங்களுக்கு நடக்கவுள்ள கதிர்வீச்சை தடுத்துவிடும் என்று நம்புகிறீர்களா?

நாம் எவ்வளவு குழந்தைதனமாக இருக்கிறோம் யோசித்துப் பாருங்கள்.

இதில் நாம் நமது வாழ்க்கையில் குழப்பங்களை சந்திக்கும் இளம் மற்றும் முன் முதுமை காலங்களில் நமது குழப்பம் எதனால் ஏற்படுகிறது என்று குழம்பியுள்ளோம். அதை வேறு பொருளை அல்லது நபரை சார்ந்து புரிந்து வைத்துள்ளோம். நாம் வாழ்க்கையில் பின்னைடயும் போது கவணித்து பாருங்கள் உங்கள் மீது கண்ணடி பட்டு விட்டது. வாஸ்து குறைபாடு. தோசம் . சாபம் என பலரால் குழப்பம் மடைதிருப்பபட்டு நமது குறை இப்போது வேறொரு நிகழ்வு மீது சுமத்தபடுகிறது. வேறு ஒன்றும் நடக்கிறது நமது குறையென்றால் நாம் முயன்று அதை சரி செய்ய வேண்டும். ஆனால் வேறொன்றிற்கு நாம் வேதனை அனுபவித்து கொண்டுள்ளோம் என்பதால் இப்போது நாம் முயலுவதில் இருந்து தப்பிக்க முடியும். நமது சோம்பேறி தனத்திற்கு ஒரு பெரிய விருந்து நடந்தது போலவும் மாறி விடுகிறது.

அதைப்போல தோசம் சாபம். என்ற பட்டியலில் கிரகண தோசமும் ஒன்று கிரகணத்தன்று பிறப்பது தோசம் என்பது துவங்கி கிரகணத்தை காண்பது அப்போது இயல்பாக வாழ்வது என அனைத்துமே தோசம் என மாற்றபட்டுள்ளது.

ஒன்று தெரியுமாங்க உலகில் உயிர் உருவாவதற்கு காரணமாக செல்கள் உருவாக காரணமே கிரகணத்தின் போது உருவாகும் கதிர் வீச்சு மாற்றம்தான்.

எனவே நமது வாழ்க்கையில் குறைந்த பட்சம் நாம் கடந்தே ஆகவேண்டிய 170 கிரகணத்தை கண்டு அஞ்சத்தேவையில்லை.

சிலர் தனது வாழ்நாளில் 200 கிரகணத்தையாவது கடந்தாக வேண்டும்.

வேறு நாட்டில் தெரியக் கூடிய கிரகணத்துக்கும் நாம் இங்கே அச்சமூட்டபடுவது இன்னும் நகைப்பானது.

தினமும் சூரிய. சந்திர உதயம். அஸ்தமனம் போல கிரகணமும் இயற்கையின் இனிய நிகழ்வு. அடுத்து நாம் இங்கு பிறக்க போகிறோமா எனத் தெரியாது. இருக்கும் போது இயற்கை நிகழ்வுகளை கண்டு ஆனந்தமடைவோம்.

கா பா.

Is Marriage makes life happy ……

திருமணம் சுவர்க்கத்தில் நிச்சயிக்கபட்டதுதான் மறுப்பதற்கு இல்லை.

ஆனால் திருமண வாழ்க்கை என்பது நீண்ட ஒரு பயணம் பயணம் முழுமையும் குதூகலமாக இருக்கும் என்று கூற முடியாது. இருப்பினும் உள்ளதில் நிம்மதி வேண்டும்தானே.

இந்த நிம்மதி ஓரளவு பொருளாதாரத்தையும் சார்ந்துதான் உள்ளது. பொருளாதாரம் மட்டும் நிம்மதியில்லை.

உங்கள் ஜாதகத்தில் #சுக்கிரன் உள்ள வீட்டை ஒன்று என எண்ணத்துவங்கி 1,5,9 ல் ராகு கேது இல்லாமல் இருந்தால் நீங்க லக்கி. அதே போலவே 1,5,7,9 ல் சனி இருந்தால் நீங்கள் டபுள் லக்கி. அதுபோலவே 1,5,7,9 ல் புதன் , சூரியன் இருந்துவிட்டால் லக்கியோ லக்கி. #குரு உள்ள வீட்டில் இருந்து 159 ல் ராகு அல்லது கேது இல்லாமல் இருந்தால் நீங்கள் ஆனந்தமான இல்லறவாசி.

கைக்கு எட்டியது வாய்க்கும் எட்ட வேண்டும் என்றால் உங்களுக்கு வரவிருக்கும் பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் மற்றும் குரு வுக்கு 1,5,9 ல் ராகு கேது இல்லாமல் இருக்க வேண்டும். சுக்கிரனுக்கு 1,5,7,9 ல் சனி இருக்க வேண்டும். செவ்வாய் க்கு 1,5,7,9 ல் சூரியன் இருக்க வேண்டும்.

குறிப்பாக உங்கள் ஜாதகத்தில் குரு உள்ள இடத்தில் இருந்து அந்த பெண் ஜாதகத்தில் ஒன்று விட்டு ஒன்று என்று உள்ள ராசிகளில் குரு இருக்க வேண்டும் (இருக்கும்) அவ்வாறு இல்லாத பட்சத்தில் யாருடைய ஒருவரது ஜாதகத்தில் குரு வக்ரமாக இருக்கும். உங்கள் குழந்தை ஜாதகங்களும் இது போல இருக்கும்.

குறிப்பு : நீங்கள் சொல்றது போல எனக்கு எதுவுமே இல்லை என்னால் நிம்மதியாக வாழ முடியாதா என உங்களுக்குத் தோன்றினால். கவலை வேண்டாம். உங்களுக்கு கிடைத்த எதாகினும் அளவோடு பயண்படுத்துங்கள். அளவை கடக்க நினைத்தால் தங்க முட்டை இடும் வாத்தை அறுத்து பார்த்த கதைபோல ஆகிவிடும்.

கா பா.

9941220631,
8610578792,

In My Experience ….

எனது அனுபவத்தில்.

மக்களில் பெரும்பாலோர் ஏதார்த்த வாழ்க்கைக்கும் எதிர்பார்த்த வாழ்க்கைக்கும் உள்ள தூரத்தை குறைக்க நினைக்கிறார்கள்.

அதிலும் முக்கியமாக அந்த தூரம் அதிகமாவது வாழ்க்கையில் பெரும் துயரம் என முடிவு செய்தும் வைத்துள்ளனர் .

அந்த தூரம் என்பதே மகிழச்சியின் அளவு கோல் போல முடிவும் செய்து விட்டனர்.

இந்த தூரம் குறைகிறதோ இல்லையோ எக்காரணத்தை முன்னிட்டு அதிகமாகி விடக்கூடாது அதை எதையாவது செய்து தடுக்க நினைக்கிறார்கள்.

இதை தடுக்க எந்த உபாயம் என அவர்கள் எந்த தீர்மானத்திற்கும் வந்து விடவில்லை. ஏனெனில் வாழ்க்கை என்பது இயற்கை. இயற்கை என்பது அடுத்த கணத்தை புரியாததாகவே மறைத்து வைத்துள்ளது என்பதில் பெரும் நம்பிக்கை வைத்தும் உள்ளனர்.

ஒரு சாரார் அந்த இடைவெளியை குறைக்க அல்லது நீளாமல் தடுக்க பரிகாரம். தகடு. தாயத்து. கல் என பல உபாயங்களை காட்சி படுத்துகின்றனர்.

இருந்த போதிலும் மக்கள் அதற்கான உபாயத்தைதான் தேடுகிறார்களே ஒழிய பரிகாரமே அந்த உபாயம் என யாரும் ஏற்றுக் கொள்ள வில்லை. அதுவும் ஒரு உபாயமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிலர் பயன்படுத்த முன்வந்தாலும் இடைவெளி அப்படியே உள்ளது.

எதார்த்தமாக சமூகத்தில் இந்த தோற்று போன உபாயத்தை மக்கள் பயன்படுத்த தற்போது அவ்வளவாக விரும்ப வில்லை.

ஒரு வேளை அச்சத்தின் காரணமாக சிலர் பயன்படுத்தி கொண்டிருந்தாலும் அச்சம் விலகியபின் முற்றிலுமாக அதை கடந்து வந்து விடுகிறார்கள்.

தற்போதைய சூழ்நிலையில் அப்படிபட்ட உபாயங்களை அதை செய்பவர்கள்தான் அடிக்கடி பயன்படுத்தி பார்த்துக் கொள்கிறார்கள்.

நான்பல ரத்தின வியாபாரிகளுடன் பழகியுள்ளேன் அவர்கள் நிலையாக ஒரே கல்லை பயன்படுத்துவதில்லை. அதிகமாக தனது பெயரை அடிக்கடி மாற்றுபவர்கள் பெயர் சோதிடம் பார்ப்பவர்கள் மட்டுமே.

உங்கள் வாழ்க்கை மாற வேண்டும் என்று முடிவெடுத்தால் நீங்கள் மாற வேண்டும். புறபொருளை மாற்றுவதால் எதுவும் மாறாது.

நீங்கள் முன்னேற வேண்டும் என்றால் நீங்கள் தயாரானால் போதும். ஆட்டோ கண்ணாடியால் ஸ்டாட்டிங் ப்ராப்ளம் எப்போதுமே வரமுடியாது. அந்த கண்ணாடியை சரி செய்வதால் மட்டும் பழுதடைந்த இயந்திர எப்போதும் இயங்கிவிடாது .

Vasthu Shastra a Insight….

ஸம்ஹிதா ஸ்கந்தத்தில் உள்ள வாஸ்து விரைவில் இலவச பாடங்களாக. அனைவரும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில்.

வாஸ்த்து என்பது சுருங்கக் கூறினால் பண்டைய கால சிவில் இன்ஜினியரிங்தான் எந்த நிலத்திற்கு எந்த மாதிரி கட்டிடம் அமைப்பது. கட்டிடத்திலும் பல வகைகள் உள்ளன. அதை எந்த பகுதியில் எதை எடுத்துக் கொள்வது. நிலம் சார்ந்த பருவ நிலை சார்ந்த கட்டிடங்களை எவ்வாறு நிறுவுவது என்பது போன்ற அனுபவ உக்தியே வாஸ்து. ஊருக்கு வாஸ்து கிடையாது கட்டுமான உக்தியே வாஸ்து.

ஒரே விதி ஊருக்கெல்லாம் கிடையாது. கடல் சார்ந்த பகுதிகளில் வாஸ்து வேறு ஆற்றுபடுகைகளில் வாஸ்த்து வேறு வரண்ட மலை சார்ந்த பகுதியில் வாஸ்து வேறு.

சிம்லாவின் கட்டிட அமைப்பை தார் பாலைவனப்பகுதியில் பயன்படுத்த முடியாது இக்ளுவின் வீட்டை இராணிப்பேட்டையில் கட்ட முடியாது.

எனவே வாஸ்து எல்லா இடங்களிலும் ஒரே விதியில் இயங்காது. மேலும் வாஸ்த்து என்பது கட்டிடத்தின் வாழ்நாளை கணக்கில் கொண்டது அதில் வாழும் மனிதனின் வாழ்க்கையை அல்ல.

வாஸ்து என்பது காற்று மழை வெயில் பருவமாற்றங்கள் வெள்ளம் என்னது போன்ற இயற்கை சூழல்கள். மனிதனின் தினசரி நடக்கும் வாழீக்கை முறைக்கு எளிதானதாக மாற்ற இயல்பான சமூக பழக்கம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டது.

வலது கை பழக்கம் உள்ளவர்கள் பயன்படுத்த உள்ளவசதிகள் இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கு இடையூறாக இருக்கும். இது போல பல விசயங்கள் அடங்கி உள்ளது


தென்மேற்கு மூலையில் பள்ளம் அமைத்து அதில் அலுவலகம் அமைத்தாலும் நஷ்டம் வராது கவலை வேண்டாம். உண்மையாக வாஷ்து என்ன கூறுகிறது என்று படிபடியாக காணலாம்.

ஒரே வீட்டில் பெருத்த அடியும் பெருத்த செழிப்பும் மாறி மாறி வரத்தான் செய்யும். ஏனெனில் வீடு என்பது பாதுகாப்பு அரன் அதன் விதிகள் பாதுகாப்பு குறித்ததே.

Vasthu Shastra a Insight….

ஸம்ஹிதா ஸ்கந்தத்தில் உள்ள வாஸ்து விரைவில் இலவச பாடங்களாக. அனைவரும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில்.

வாஸ்த்து என்பது சுருங்கக் கூறினால் பண்டைய கால சிவில் இன்ஜினியரிங்தான் எந்த நிலத்திற்கு எந்த மாதிரி கட்டிடம் அமைப்பது. கட்டிடத்திலும் பல வகைகள் உள்ளன. அதை எந்த பகுதியில் எதை எடுத்துக் கொள்வது. நிலம் சார்ந்த பருவ நிலை சார்ந்த கட்டிடங்களை எவ்வாறு நிறுவுவது என்பது போன்ற அனுபவ உக்தியே வாஸ்து. ஊருக்கு வாஸ்து கிடையாது கட்டுமான உக்தியே வாஸ்து.

ஒரே விதி ஊருக்கெல்லாம் கிடையாது. கடல் சார்ந்த பகுதிகளில் வாஸ்து வேறு ஆற்றுபடுகைகளில் வாஸ்த்து வேறு வரண்ட மலை சார்ந்த பகுதியில் வாஸ்து வேறு.

சிம்லாவின் கட்டிட அமைப்பை தார் பாலைவனப்பகுதியில் பயன்படுத்த முடியாது இக்ளுவின் வீட்டை இராணிப்பேட்டையில் கட்ட முடியாது.

எனவே வாஸ்து எல்லா இடங்களிலும் ஒரே விதியில் இயங்காது. மேலும் வாஸ்த்து என்பது கட்டிடத்தின் வாழ்நாளை கணக்கில் கொண்டது அதில் வாழும் மனிதனின் வாழ்க்கையை அல்ல.

வாஸ்து என்பது காற்று மழை வெயில் பருவமாற்றங்கள் வெள்ளம் என்னது போன்ற இயற்கை சூழல்கள். மனிதனின் தினசரி நடக்கும் வாழீக்கை முறைக்கு எளிதானதாக மாற்ற இயல்பான சமூக பழக்கம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டது.

வலது கை பழக்கம் உள்ளவர்கள் பயன்படுத்த உள்ளவசதிகள் இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கு இடையூறாக இருக்கும். இது போல பல விசயங்கள் அடங்கி உள்ளது


தென்மேற்கு மூலையில் பள்ளம் அமைத்து அதில் அலுவலகம் அமைத்தாலும் நஷ்டம் வராது கவலை வேண்டாம். உண்மையாக வாஷ்து என்ன கூறுகிறது என்று படிபடியாக காணலாம்.

ஒரே வீட்டில் பெருத்த அடியும் பெருத்த செழிப்பும் மாறி மாறி வரத்தான் செய்யும். ஏனெனில் வீடு என்பது பாதுகாப்பு அரன் அதன் விதிகள் பாதுகாப்பு குறித்ததே.

Respected Person in Society

சமுதாயத்தில் ஓரளவுக்கு மதிக்கதக்க நபராக வேண்டும் எனில் கொஞ்சம் குணமும் கூடவே கொஞ்சம் பணமும் தேவை. பதவி என்பது கூட பணத்தின் அளவீடே.

குணமும் பணமும் உங்களுக்கு இருக்கிறதா.

குரு + சனி+ சுக்கிரன் இணைவு மற்றும் பார்வை உங்கள் ஜாதகத்தில் இருந்தால் எப்படியாவது பணமும் குணமும் வந்து விடும். சமுதாயத்தில் குறைந்த பட்சம் தெருவிலாவது உங்கள் மீது மதிப்பை ஏற்படுத்தும்

இதில் முக்கியமானது நீங்கள் எப்போதும் எதிர்பாலினத்தார் சிலரால் கவணிக்கபடுவீர்கள் .