ஜோதிடம் மட்டும் அல்ல அனைத்து துறைகளும் தனது கருத்துக்களை விரிக்கவும் சுருக்கவும் செய்கிறது.ஒரு விசயத்தை குறிபிட்ட விதிகளில் அடைக்க அது சுருக்கபடுவதும்.அதே விசயத்தை அல்லது அந்த விசயத்திற்கு உண்டான விதியை விளக்கி பெருமை பேச அல்லது பாண்டித்தியத்தை நிரூபிக்க விரித்து கூறுதல் இயல்பானது.உதாரணமாக E=MC² என்று சுருக்கி அதை பல நூறு பக்கங்கள் அடங்கிய நூலாக விரிக்கவும் செய்யலாம்.ஆனால் தேவை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.சூத்திரம் ப்ரயோகிக்க வேண்டிய இடத்தில் அதை மட்டும் உபயோகிக்க வேண்டும். அந்த இடத்தில் நூறு பக்க கட்டுரையை எழுதக் கூடாது.சுக்கிரன் என்பது எதிர்பாலினத்தை ஈர்க்கும் தன்மையை குறிப்பது .புதன் என்பது கம்யூனிகேஷன். இதுதான் ஜாடை. பேசுதல் கேட்பது. இது போல அனைத்து தொடர்பு எண்ணத்தை செயல்படுத்துவதை குறிப்பது .ஜாதகம் என்றாலே சுக்கிரனும் இருக்கும் புதனும் இருக்கும்.அப்படி என்றால் அனைவருக்கும் எதிர் பாலின ஈர்ப்பு இருக்கும்.இந்த ஈர்ப்பு என்பது உருவாக பெரிய பின்னனி கதை உள்ளது. அதை பேசினால் தந்தை தாய் இணையும் போது அவர்களுக்கு இருந்த எதிர்பாலினம் குறித்த எதிர்பார்ப்பு என்பதை பற்றி எல்லாம் பேச வேண்டும். இப்போது அதை பேச வேண்டாம்.சுக்கிரன் எதிர்பாலின ஈர்ப்பு. அதனுடன் புதன் இணைவு பெற்றால் அந்த ஈர்ப்பால் தூண்டபட்ட விருப்பத்தை ஜாதகர் வெளிப்படுத்துவார்.சொல்லுக்கும் தெரியாம சொல்லத்தான் வந்தேனேசொல்லுக்குள் அர்த்தம் போல சொல்லாமல் நின்றேனே.சொல்லுக்கும் அர்த்ததுக்கும் தூரங்கள் கிடையாதுசொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது.சொர்க்கமாக மாற வேண்டும் என்றால் சொல்லித்தான் ஆக வேண்டும்.இவ்வாறு தனக்குள்ள எதிர்பாலின ஈர்ப்பை சரியாக சொல்லுதல் என்பதற்கான சூழல். தேவை.சுக்கிரன் + புதன்எதிர்பாலின ஈர்ப்பை வெளிபடுத்தி காதல் வலையில் தள்ளி விடும்.இதனுடன் ராகு கேது இணைவு வலையில் துளையிடும்.சுருக்கி சொன்னால் சுக்கிரன் +புதன் காதலை ஏற்படுத்தும்.
Page 5 of 8
Love ..
ஜோதிடம் மட்டும் அல்ல அனைத்து துறைகளும் தனது கருத்துக்களை விரிக்கவும் சுருக்கவும் செய்கிறது.ஒரு விசயத்தை குறிபிட்ட விதிகளில் அடைக்க அது சுருக்கபடுவதும்.அதே விசயத்தை அல்லது அந்த விசயத்திற்கு உண்டான விதியை விளக்கி பெருமை பேச அல்லது பாண்டித்தியத்தை நிரூபிக்க விரித்து கூறுதல் இயல்பானது.உதாரணமாக E=MC² என்று சுருக்கி அதை பல நூறு பக்கங்கள் அடங்கிய நூலாக விரிக்கவும் செய்யலாம்.ஆனால் தேவை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.சூத்திரம் ப்ரயோகிக்க வேண்டிய இடத்தில் அதை மட்டும் உபயோகிக்க வேண்டும். அந்த இடத்தில் நூறு பக்க கட்டுரையை எழுதக் கூடாது.சுக்கிரன் என்பது எதிர்பாலினத்தை ஈர்க்கும் தன்மையை குறிப்பது .புதன் என்பது கம்யூனிகேஷன். இதுதான் ஜாடை. பேசுதல் கேட்பது. இது போல அனைத்து தொடர்பு எண்ணத்தை செயல்படுத்துவதை குறிப்பது .ஜாதகம் என்றாலே சுக்கிரனும் இருக்கும் புதனும் இருக்கும்.அப்படி என்றால் அனைவருக்கும் எதிர் பாலின ஈர்ப்பு இருக்கும்.இந்த ஈர்ப்பு என்பது உருவாக பெரிய பின்னனி கதை உள்ளது. அதை பேசினால் தந்தை தாய் இணையும் போது அவர்களுக்கு இருந்த எதிர்பாலினம் குறித்த எதிர்பார்ப்பு என்பதை பற்றி எல்லாம் பேச வேண்டும். இப்போது அதை பேச வேண்டாம்.சுக்கிரன் எதிர்பாலின ஈர்ப்பு. அதனுடன் புதன் இணைவு பெற்றால் அந்த ஈர்ப்பால் தூண்டபட்ட விருப்பத்தை ஜாதகர் வெளிப்படுத்துவார்.சொல்லுக்கும் தெரியாம சொல்லத்தான் வந்தேனேசொல்லுக்குள் அர்த்தம் போல சொல்லாமல் நின்றேனே.சொல்லுக்கும் அர்த்ததுக்கும் தூரங்கள் கிடையாதுசொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது.சொர்க்கமாக மாற வேண்டும் என்றால் சொல்லித்தான் ஆக வேண்டும்.இவ்வாறு தனக்குள்ள எதிர்பாலின ஈர்ப்பை சரியாக சொல்லுதல் என்பதற்கான சூழல். தேவை.சுக்கிரன் + புதன்எதிர்பாலின ஈர்ப்பை வெளிபடுத்தி காதல் வலையில் தள்ளி விடும்.இதனுடன் ராகு கேது இணைவு வலையில் துளையிடும்.சுருக்கி சொன்னால் சுக்கிரன் +புதன் காதலை ஏற்படுத்தும்.
Planet to planet …..

ஒரு ஜாதகத்தில்.
கிரகங்கள் சுழன்று வரும் வழியே அடுத்து தொடும் கிரகங்களை கொண்டு பலன்கூறலாம்.
ஒரே ராசியிலோ அல்ல அடுத்து வரும் எத்தனையாவது ராசியிலோ. இதில் பாகை அளவு முக்கியம் ஆனால் பொதுவாக பார்க்கலாம்.
ஒரு கிரகம் அடுத்து உள்ள கிரகத்தை தூண்டும் அது எவ்வளவு தூரம் என்றாலும்.
நகர்ந்து சென்று தொடும் கிரகம் கிரகத்தின் முக்கிய பாத்திரமாகவும் தொடப்படும் கிரகம் பன்பாகவும் எடுத்துக் கொள்ளவும்.
உதாரணமாக. சூரியன் அதற்கு அடுத்து வரும் பாகைகளில் சந்திரன் இருந்தால் அது அதே ராசியிலோ அல்லது எத்தனை ராசிகள் தாண்டியிருந்தாலும். சூரியனுக்கு அடுத்து வரக்கூடிய கிரகம் என்று மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
சூரியனுக்கு அடுத்து சந்திரன் இருந்தால் தந்தையிடம் இருந்து ஜாதகருக்கு வீடு கிடைக்கும்.
குருவுக்கு அடுத்து சனி இருந்தால் ஆணோ பெண்ணோ ஜாதகர் சுயமாக தனது பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வார் . ஒருவேளை சனிக்கு அடுத்து குரு வந்தால் தொழில் மூலம் ஜாதகர் கௌரவமடைவார். ஆனால் இதில் குழப்பம் அடைந்து விட கூடாது குரு சனி இரண்டில் எது முன் வந்தாலும் இவைகளின் இணைவால் ஜாதகர் சிறு வயதில் பொருளீட்ட துவங்கிவிடுவார்.
இது போல ஒவ்வொரு விசயங்களையும் காண வேண்டும்.
சூரியனுக்கு அடுத்த செவ்வாய் தந்தையிடம் இருந்து நிலம் வரும் என்று நினைத்தால் அது தவறு ஏனெனில் செவ்வாய் நிலம் கிடையாது. சூரியனுக்கு அடுத்த செவ்வாய் தந்தை வழியாக நமது பங்குதாரர் உதவி கிடைக்கும். பலருக்கு தந்தை வைத்த கடன் வருவதற்கும் இந்த சூரியனுக்கு அடுத்த செவ்வாயே காரணம் .
சோதிடம் கற்று கொள்ளுங்கள் அது மிகவும் எளிதானது. கடற்கரை மணலில் நடைபயணம் செய்வது போல எளிதானது. சிலர் சக்கர நாற்காலியில் உங்களை அமரவும் வைக்கலாம் கால்கள் நன்றாக இருக்கும் போது சக்கர நாற்காலி எதற்காக. புரியாத போது மணனம் செய்யலாம். புரிந்தவருக்கு எதுவும் தேவையில்லை. நட்சத்திர பெயரையே தெரியாமல் பலன் கூறலாம். ஏனெனில் நட்சத்திரம் என்பது measuring units ல் பிரிட்டிஷ் சிஸ்டம் போல அதாவது இன்ஞ் போல மெட்ரிக் சிஸ்டத்தில் அளப்பவருக்கு அதாவது மில்லி மீட்டர்ல் அளப்பவருக்கு இன்ஞ் பற்றி எதையும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை .
உங்கள் அன்பு ஜோதிடன் ,ஜோதிட பயிற்சியாளர், ஜோதிட எழுத்தாளர், சுய முன்னேற்ற பேச்சாளர் கா பா
9941220631
8610578792
Own house Opportunity for native …..
#சொந்தவீட்டில்_வாழும்_அமைப்பு
அதே பதிவுதான் மீண்டும் ஒரு முறை.
ஒருவர் ஜாதகம் தனியாக ஒரு மாதியும் கூட்டாக ஒரு மாதிரியும் இயங்கும். உதாரணமாக ஒருவர் செல்வ நிலையில் பின்தங்கியிருக்கிறார். அவர் சனி பார்வை பெற்ற சுக்கிரன் உள்ள ஜாதகரை திருமணம் செய்து கொண்டால் அவர் செல்வ செழிப்பு அடைவார் ஆனாலும் கூட அந்த செல்வம் தனிபட்ட முறையில் அவருக்கு உதவாது சிலரை நீங்கள் பார்த்திருக்கலாம் நைந்து போன காலர்கள் உடைய சட்டை ஓட்டை பணியன். பிய்ந்த செருப்புகளுடன். ஆனாலும் நல்ல வசதியுடன் கடைத் தெரு வருவதற்கு கூட நடந்தே வருவர் இல்லாவிட்டால் சைக்கிளை உருட்டி கொண்டே வருவர். ஆனால் அவர் மனைவியோ இரட்டை வடசங்கிலி மாட்டின் மூக்கனாங்கயிறை போல போட்டிருப்பார் குடும்பத்துடன் எங்காவது போக வேண்டும் என்றால் ஷெட்டில் இருக்கும் காரை வெளியே எடுப்பார்கள் .
இதற்கு காரணம் கணவர் ஜாதகத்தில் அனுபவிக்கும் அமைப்பு குறைவு ஆனால் அவர் மனைவி ஜாதகம் இவரை சம்பாதிக்க தூண்டும் வாய்ப்புகளும் அமையும்.
இவர்கள் பெரும்பாலும் வெட்டொன்னு துண்டு ரெண்டுனு தொழில் அல்லது பணியிடங்களில் பேச மாட்டார்கள் வழவழ கொளகொள என பேசி சிரித்து மலுப்பி தொழிலை தக்க வைத்துக் கொள்வர் ஏனெனில் இவர் செல்வம் மனைவிக்கானது இவரை பேசவிடாமல் சம்பாரிக்க வைக்கும்.
சுய ஜாதகத்தில் சனி பார்வை பெற்ற சுக்கிரன் உள்ள ஜாதகர் தொழில் செய்வதே ஒரு அழகுதான் கராராக பேசி தொழில் அல்லது பணி செய்வர். எதாகினும் நேராக களத்தில் இறங்கி அதை சரி செய்வர். தொழிலுக்கு தகுந்தாற் போல ஆடைகளில் பகட்டு ரேடோ அல்லது கேசியோ எடிபிஷ் கை கடிகாரம் தனக்கான ஒரு வாகனம் என சிம்பிளாக கெத்தாக தொழில் அல்லது பணிக்கு செல்வர்.
நாம் பேசவந்த விசயத்தை விட்டு எங்கேயோ போய்விட்டோம்.
ஒருவர் ஜாதகத்தில் மேசம். மிதுனம். சிம்மம். துலாம். தனுசு. கும்பம் போன்ற ராசிகளில் சந்திரன் இருந்தால் அவர்கள் சொந்த வீட்டில் என்றாவது குடிபுகுவர். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அவரது குடும்பத்தில் மேற்கண்ட ராசிகளில் ஒருவர் வந்தால் வீடு அமையும். அது மனைவி. குழந்தை என யாரோ ஒருவர்.
மேற்கண்ட ராசி உங்கள் வீட்டில் ஒருவருக்கு கூட இல்லாவிட்டால் நீங்கள் வீட்டை கட்டி வாடகைக்கு விட்டுவிட்டு நீங்களும் வாடகை வீட்டில் வசித்து வரும் நிலை இருக்கும். சிலர் அதையும் தாண்டி தன் வீட்டுக்கு குடிவந்தால் குடும்பத்தில் நிம்மதி இழப்பு. எப்போதும் சண்டை. வேறு இடங்களுக்கு மாற்றம். குழந்தை. தொழில். குறித்து வீடு மாற்றம். கடன் தொந்தரவுகளால் ஊரைவிட்டு வெளியேறுதல் நிகழும்.
எனவே மேற்கண்ட ராசி உங்கள் வீட்டில் ஒருவருக்காவது இருந்தால் நீங்கள் சொந்த வீட்டில் வசிக்கலாம். அவ்வாறு இல்லாதவர்கள். ஜெண்டிலா வீட்டை கட்டி வாடகைக்கு விட்டுவிட்டு நீங்களும் வாடகை வீட்டில் குடிபுகலாம்.
இனி திருமணம் செய்ய இருப்பவர்கள் இதை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

Degree aspect …..
ஒரு ஜாதகத்தில் 12 பாவ முனை புள்ளிகளும் அந்த ஜாதகர் அனுபவிக்க வேண்டிய சிக்கல்களை கூறுகிறது. அந்த பாவத்தின் 17° புள்ளி அந்த சிக்கலில் இவருக்கு கிடைக்கும் நன்மையையும். 24°புள்ளி அந்த சிக்கலில் இவர் அடையும் துன்பத்தையும் விவரரிக்கிறது.
பாவமுனை. 17°, 24° இந்த மூன்று புள்ளிகளும் ஒரே ராசியில் வர வேண்டிய அவசியம் இல்லை.
எனவே எந்த ஒரு பாவமானாலும் அந்த பாவ ஆதிபத்யத்தை இரண்டு கிரகங்கள் பங்கு போட்டு கொள்ள அதிகப்படியான வாய்ப்பு உள்ளது.

Yoga …. Yogam …..

யோகம் என்றால் இணைப்பு என பொருள்.
#யோகா என நாடு முழுவதும் ஒரு நல்ல அபிப்பிராயம் வளர்ந்து வருகிறது. இன்று யோகா தினமாம்.
யோகா என்றால் எதை இணைப்பது.
நமக்குள் உள்ள அறிவு என்பது கற்றதலினால் வந்தது. நமக்கு பிறவியிலேயே பல விசய வாசனைகள் இருக்கும் அதன் பெயரும் அறிவுதான் இதை விவேகானந்தர் இயல்புணர்ச்சி என்று குறிப்பிடுகிறார். தேனீக்களுக்கு கூட்டை உருவாக்கும் கட்டிடகலை எங்கும் சொல்லிகொடுப்பது இல்லை. அது போலவே அனைத்து மிருகம் பறவை என அனைத்தும் ஏதாவது ஒரு இயல்பை கொண்டிருக்கும்
ஆனால் மனிதனுக்கு அவ்வாறு எதுவுமே இல்லை. மகனே உன் சாமர்த்தியம் என இறைவன் படைத்துவிட்டான்.
இதில் இயல்பாற்றலான இயற்கை பெரும்பதியுடன் நம்மை இணைக்க எடுக்கும் உக்தியே இந்த யோகா என்றாலும் இது மட்டும்தான் உக்தி என கூற இயலாது.
யோகா என்பது ஆசனா மட்டுமே எனவும் ஒரு தவறான புரிதல் உள்ளது.
யோகம் என்ற இயற்கையாக இணைந்து விட நாம் சில பிரிப்ரேசனை செய்யவேண்டும். அதன் படி வரிசையாக எட்டு நிலைகளை இந்த யோகா உள்ளடக்கியுள்ளது அதில் ஒன்று ஆசனா.
இந்த ஆசனாவை பிரதானமாக கொண்ட முறை ஹடயோகா இது வாழ்நாளை நீட்டிக்க உடலை பலமாக்குவது. இந்த பயிற்சி கத்தி மேல் நடப்பது போல ஆபத்தானவை.
யோகா செய்வதால் வேலைக்கு நடுவே ஏற்படும் மன அழுத்தம் குறையும் மனம் விரிவடையும் என்பது சும்மா லொலாலொலகாட்டிக்கு ஏனெனில் தாரணை என்பதே மனம் கடந்த நிலை 12 நிமிடமாவது மனம் கடந்து இருந்தால்தான் அது ஒரு தாரணை 12 தாரணை தொடர்ச்சியாக செய்தாலே அது தியானம் . பல தியானங்கள் தொடர்ச்சியாக செய்தல். சமாதி
சமாதிக்கு பின் சாதனா அதன் பின் விபூதி அதன் இறுதி கைவலயம் என விவரிக்கிறார் பதஞ்சலி .
இருப்பினும் யோகா வின் ஆரம்ப இலக்கு
யோக சித்த விருத்தி நிரோத
சித்தம் விருத்திகளடைந்து பலவாக பரவுவதை தடுத்து நிறுத்துதலே யோகம்.
நாம் நமது வாழ்க்கை தேவைகளுக்காக ஓடுவதற்கு இடையே கண்களை மூடி கானும் கணவல்ல யோகம்.
கா பா.
Happy Yoga Day
Hanging with own Horoscope…….
ஜாதகத்தை பார்க்காமலேயே பலன் கூறலாம்.
யார் ஒருவர் தனது ஜாதகத்தை வாராவாரம் தூக்கிக் கொண்டு சோதிடரை சந்திக்க புறப்படுகிறாரோ அவர் தற்போது முன்னேறவே போவதில்லை . முழுவதும் நிரம்பிய எதிர்மறைகளின் மூட்டை அவர்.
சோதிடம் என்பது வழிகாட்டி மட்டுமே. தூரம் அதிகமாக இருக்கிறது என்பதற்காக மீண்டும் மீண்டும் அந்த மைல்கல்லை படிப்பதால் தூரம் குறைய போவதில்லை.
நான் அதிகமாக பார்க்கிறேன்.
தற்போது திருமணம் தாமதம். வேலையின்மை. கடன்சுமை. குழந்தை பாக்கியம் தடையுள்ளவர்கள் அதிகமாக சோதிடத்தை கற்றுவிடுகிறார்கள். ஆனால் எதிர்மறையாக கற்றுவிடுகிறார்கள். அவர்கள் அவர்களாகவே எழ இயலாத குழியை தோண்டி அதனுள் இறங்கி விடுகிறார்கள்.
சோதிடம் என்பது என்ன என்று தெரியாமல் உள்ள பலருக்கு காலாகாலத்தில் எல்லாம் சிறப்பாக நடந்து விடுகிறது.
நீங்கள் சோதித்து பாருங்கள் குடும்பம் பிரிவில் உள்ளவர்கள். 28 வயதுக்கு மேல் திருமணம் ஆகாதவர்கள். 35 வயது வரை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இவர்களில் 90% பேர் சோதிடம் கற்று கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் ஜாதகத்தில் நெகட்டிவ் விசயங்களை கவணித்து கொண்டிருப்பார்கள்.
சோதிடத்தில் சிக்கி கொள்வதை கண்டறிதல் மிகமிக எளிதானது.
அபிமன்யு வீரன்தான் அவனுக்கு இணையாக வில் வித்தையில் ஆளே இல்லை. பல வரங்களை பெற்வனும் கூட. எதிரியை நேருக்கு நேராக நின்று எதிர்ப்பதில் அவனுக்கு இணை எவரும் இல்லை. ஆனால் சக்கர வியூகத்திற்க்குள் சென்று போரிட்டவனுக்கு அதிலிருந்து வெளியே வர தெரியவில்லை. அதுவே அவன் மரணித்ததற்கு முக்கிய காரணம்.
சோதிடம் சக்கரவியூகம் போல வெளியே வரும் காலம் அறிந்து கொள்ள கற்க வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் திருமணம். கடண் பிரச்னை. குழந்தை பாக்கியம் என அனைத்தும் சுயமாக உங்களாலேயே ஒவ்வொரு முறையும் பயத்தினால் தடை படும்.
எனவே சோதிடத்தை கற்றுக்கொள்ளுங்கள் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு விசயத்திற்கும் அதை வைத்து கொண்டு காரணம் தேடாதீர்கள்.
ஒன்று தெரியுமா நான் எனது திருமணத்திற்காக எங்கள் இருவர் ஜாதகத்திற்கு இதுவரை பொருத்தம் பார்க்கவே இல்லை . ஏனெனில் எனக்கு திருமண வாழ்க்கை அவ்வளவு சிக்கலாக இருக்காது என நான் தெரிந்து விட்டபின்பு யாரை திருமணம் செய்தால் என்ன. எனது விதி மாறவா போகிறது
Invention of Rain >>>> God
பூமியில் துளையோ பள்ளமோ ஏற்படுத்தினால் உள்ளே நீர் கிடைக்கும் என்று கண்டறிந்தவனே இந்த சமூகத்தின் கடவுள்.

House vs Planets….
ஒவ்வொரு கிரகமும் தனி தனி பார்வை பெற்றுள்ளது போல, ஒவ்வொரு வீடும் மற்ற வீடுகள் மீது பார்வையை செலுத்தும்,
இந்த பார்வை கோள்களை போலவே ,ஒவ்வொரு வீட்டுக்கும் தனிதனியே பார்வை தன்மைகள் வேறுபடும். .
நாம் காணும் நமது முறையில்.குழப்பங்களை தவிப்பதற்காக கோள்களோ, வீடுகளோ எதாகினும் அதற்கு தான் உள்ள இடத்தில் இருந்து 1 , 5 , 7 , 9 வீட்டை மற்றும் அதிலுள்ள கிரத்தை (பார்க்கும் எனக் கூறாமல் )இனைவு பெறும் என கூறலாம்.
நாம் காணும் இம்முறை ராஜநாடி என்பதால்.
நாடி போலவே இருக்கும் ஆனால் பலமடங்கு எளிமையாக்கபட்டு இருக்கும்
நாம் புரிந்து கொள்ள வேண்டியது கிரக ,ராசி தன்மைகள் மட்டுமே.
நண்பர்கள் அனைவரும் மாதிரி ஜாதகம் ஒன்றை வைத்து கொள்ளவும், அது தங்களது வீடுகளில் உள்ளவர்கள் ஜாதகமாக இல்லாதவாறு பார்த்து கொள்ளவும்.
நன்றி.
ஒவ்வொருவரும் தாங்களின் கருத்து மற்றும் சந்தேகங்களை கமெண்ட் செய்யவும்.

Zodiac circle a Try
கீழுள்ள படங்களில் உள்ளது ஒருவருடைய ஜாதகம், அவர் பிறக்கும் போது ப்ரபஞ்சத்தில் இருந்து சூரிய குடும்பத்தை பார்ப்பது போல வடிவமைக்கபட்டது, இதுபோலதான் அன்றைய கிரகங்கள் வானில் இருந்திருக்கும்,1~12 என்பது மேசம்~மீனம்மற்ற கிரகங்கள் முறையே சுற்றுப்பாதையில்,லக்னம், ராகு கேது வரை உள்ளது,மேலும் ப்ரபஞ்சத்தில் மூன்று கோணங்களில் அதாவது மேல், முன் பின், உள்ளது,இந்த ஜாகருக்கு ராசிகட்டம் அமைத்து முயற்சி செய்யுங்களேன்




