North & South Node – Top level view

ராகு கேது என்றால் என்ன?

கொஞ்சம் டீடைலான பதிவு, குழப்பமான சொல்கள் முடிந்தவரை குறைத்துள்ளேன்,

கீழுள்ள படத்தில்
சூரியன், பூமி, சந்திரன் முறையே மஞ்சள், நீலம், வெளிர் நிறம்,

சிவப்பு கோடு சந்திர பாதை ( 5°சாய்ந்தது )
புள்ளி ( டாட்டேட்) கோடு சந்திர பாதை மட்டமாக இருந்தால் எப்படி என்பதற்கான கற்பனை கோடு,

பச்சை அம்புகுறி சுழலும் டைரக்சன்,

மஞ்சள் துவங்கு கோடு, மேசம்ன்னு கூட வைச்சுக்கலாம்,

நீல கோடு பூமியின் பாதை,

பச்சை கூம்பு முதல்புள்ளி,

சிவப்பு கூம்பு நகர்ந்து கொண்டுள்ள புள்ளி,

பூமி சூரியனை சுற்றி வர 365.24 நாள், அதற்குள்ளாக பூமியை சந்திரன் 12 முறை சுற்றிவிடுகிறது அது 12 முறை சுற்றி தன்னுடைய துவங்கு புள்ளியை 346 நாட்களிலேயே அடைந்து விடுகிறது, இது தெரிந்த விசயம்தான்,

நாம் பூமியில் இருந்து பார்க்கும் போது,

நமக்கும் சூரியனுக்கும் இடையே 12 முறையும், சூரியனனுக்கு நேர் எதிர் அதாவது பூமிக்கு பின்புறம் என்று 12 முறையும் வருகிறது,

அம்மாவாசை என்பது சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது சந்திரனில் படும் வெளிச்சம் நாம் பார்க்கும் நிலாவின் பின்பக்கமாக இருப்பதால் நமக்கு சந்திரன் இருளாக தோன்றுவது,

பௌர்ணமி என்பது சூரியன் சந்திரனுக்கு இடையே பூமி நிற்பது, அப்போது சூரிய ஒளி படும் சந்திர பகுதியை நாம் முழுவதும் பூமியிலிருந்து பார்க்க முடியும் ,

இதில் முக்கியமான விஷயம்,

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது சூரியனை சந்திரன் மறைக்க வேண்டும்,

சூரியன் ,பூமி ,சந்திரன் என்ற நிலையில் இருக்கும் போது சூரிய ஒளி சந்திரன் மேல் படுவதை பூமி தடுக்கும்,

இவ்வாறு நடப்பதே கிரகணம்,

ஆனால் வருடத்திற்கு 12அம்மாவாசை, 12 பௌர்ணமி வருகிறது, அப்போது எல்லாம் கிரகணம் நடக்குமா ? எனில் இல்லை ,

எப்படி இடையில் வந்தால் மறைக்க வேண்டும்தானே, பிறகு ஏன் மறைக்கவில்லை?

சந்திரனின் பாதை பூமியின் அச்சில் இருந்து சாய்ந்துள்ளது,

அப்படியெனில் ஒவ்வொரு முறையும் இந்த மூன்று கிரகங்களும் நேர் கோட்டில் வரும்போதும், நாம் நேர்கோடு என்று கூறுவது,

பூமியில் இருந்து பார்க்கும் போது பக்கவாட்டு சுழற்சியை மட்டுமே கூறுகிறோம், ஆனால் அந்த சூரியனும் சந்திரனும் ஒரே பக்கவாட்டு கோணத்தை அடைந்தாலும் ,மேல் கீழாக உள்ளது,

ஒரு வீட்டில் முதல் தளத்தில் ஒருவரும், இரண்டாம் தளத்தில் ஒருவரும் உள்ளது போல, அவர்கள் இருவரையும் நீங்கள் சுட்டி காட்ட ஒரே பக்கவாட்டு திசையைதான் காட்ட முடியும், கையை அந்த கட்டிடத்தை பார்த்து திருப்பி கூறினாலும், மேல்கீழாக இருப்பதால் ஒருவரை ஒருவர் மறைக்க இயலாது,

இது ஒன்று போல இருப்பதுமில்லை ,
சந்திர பாதை சாய்வு ஆடிஅசைந்து கொண்டே இருப்பதால், உதாரணம் தட்டு கீழே விழுந்து கடைசியில் நிற்கும் போது விளிப்புகளை தரையில் மாறிமாறி படுவது போல, தலையாட்டுவது போல, பறக்கும் தட்டு பக்கவாட்டில் அசைவதுபோல அசைந்து கொண்டே உள்ளது,

எனவே முதல் தளத்தில் உள்ள சூரியனை பார்க்கும் போது, சில முறை இரண்டாம் தளத்திற்கும், சில முறை தரைதளத்திற்கும், ஒரு குறிபிட்ட முறைகளில் மட்டுமே சூரியன் உள்ள தளத்திற்கு சந்திரன் வருகிறது, மற்ற முறைகள் அம்மாவாசை என்றாலும் சூரியனுடன் இனையும் போது மட்டுமே சூரிய கிரகணம்,

அதுபோலவே, எதிரெதில் கட்டிடத்தில் சந்திரன், சூரியன் இருப்பதாகவும் இடையே பூமி இருப்பதாகவும் கற்பனை செய்யவும், இது பௌர்ணமி, இருவரும் முதல் தளத்திற்கு வந்தால் சந்திர கிரகணம்,

சந்திரபாதை சூரிய நடுகோட்டு பரப்பில் இருந்து 5.1° சாய்ந்துள்ளது, பரப்பிற்கு கீழே பாதி பாதையும், மேல் பாதி பாதையும்,

மேல், கீழ் என பிரியும் இடத்தில் ஒரு புள்ளி இருக்கிறதே, அதந்த புள்ளியில் சந்திரன் பயனிக்கும் போது முதல் மாடி, கீழ் பகுதியில் பயனித்தால் தரைதளம், மேல் பகுதியில் பயனித்தால் இரண்டாம் தளம் என கொள்க,

பூமியும் பயனிக்கிறது, அதனுடனே சந்திர பாதையும் செல்கிறது, மேலும் சந்திரபாதையும்,
நடுவில் துளையிட்டு அதில் நூல்கட்டு தொங்க விடபட்ட தட்டுபோல் பக்கவாட்டில் ஏறி ஏறி இறங்கியும் கொண்டுள்ளதால், இந்த மேல், கீழ், நடு புள்ளியும், நிலைகளும் மாறி கொண்டே உள்ளது,

இப்போது சந்திரபாதை நடுநிலை அதாவது சந்திரன் முதல் தளத்தில் உள்ள இடம் பூமிக்கும் சூரியனுக்கும் சரியாக இடையில் வந்தால் அன்று சூரியன் சந்திரனால் மறைக்கபடும், இது சூரிய கிரகணம்,

அடுத்த மாதம் சந்திரன் இதே போன்று சரியாக இடையில் வந்தாலும் சந்திர பாதை மேலோ, கீழோ சென்று விட்டதெனில் அப்போது கிரகணம் நிகழாது,

மேலம் இந்த சந்திரபாதையின் பக்கவாட்டுத் தலையாட்டம் ஒரு குறிபிட்ட கணிதத்திற்குள் உள்ளது, மேலும் இந்த கணிதம் சந்திர சுழற்சியுடனும் ஒருங்கிணைந்தும் உள்ளது,

சந்திர பாதையில் ஒரு புள்ளி வைத்தால் அதன் பக்கவாட்டு அசைவில் மேல் சென்று கீழ்வந்து அந்த புள்ளி சூரியநடுகோடு பரப்பை மீண்டும் தொட 18.6 வருடம் ஆகிறது, அதே போல பூமி இந்த நடுபுள்ளி பூமிபாதையின் துவங்குபுள்ளி சந்திரன் என அனைத்தும் 18.6 வருடத்திற்கு ஒரு முறை சந்தித்து மீண்டும் தனது பயனத்தை துவங்குகிறது,

இந்த சந்திர பாதை சூரிய நடுகோட்டு பரப்பிற்கு சமமாக எந்த புள்ளி உள்ளதோ அதுவே ராகு எனவும் கேது எனவும் அழைக்கபடுகிறது,

துவக்கமும், முதல், இரண்டாம் வருடத்திற்கும் படமுள்ளது, 18.6 வருடம் கழித்து முதல் படத்தில் உள்ளது போல மீண்டும் வரும்,

இதில் பச்சை கூம்பு துவக்கத்தில் பரப்பில் இருத்த புள்ளி அது வருடாவருடம் தனது பாதையில் மேலேருவதை கவணிக்கவும்,

சிவப்பு கூம்பு தற்போதுள்ள பரப்பு மட்டபுள்ளி இது ராகு என கொள்ளவும், பூமியில் இருந்து பார்க்கும் போது சூரியன், சந்திரன் ஒரு திசையில் செல்வது போல தோண்றினால், ராகு அதற்கு எதிர் திசையில் பயனிக்கும், ராகுவிற்கு நேரெதிர்கனு கேது, ஏனெனில் வருடத்திற்கு ஆறுமாதம் சந்திர பாதையின் எதிர்பக்கம் சூரியனை நோக்கி இருக்கும் அப்போதுள்ள கணு கேது,

இதுல சந்தேகமிருப்போர் கேட்கலாம்,

Vastu Shastra **

#வாஸ்து

நீங்கள் விரும்பி கட்டிய அல்லது வாங்கிய வீடு வாஸ்து படி ஏதாவது குறை இருந்தால் கவலை வேண்டாம்.

அதற்காக எதையும் இடித்து சரி செய்து பணத்தை விரயம் செய்யவும் வேண்டாம்.

அதற்கு எளிதான வழிமுறை உங்கள் வீட்டில் ஒரளவு நடுவான பகுதியில் உள்ள சுவற்றில் அதுவும் தெற்கு நோக்கிய சுவற்றில் நீல நிற ( ஜீரோ வாட்ஸ் என கூறுவர்) மின்விளக்கை பொருத்தி 24×7 தொடர்ச்சியாக ஒளிரும் படி செய்து விடுங்கள்.

எப்படி பட்ட வாஸ்து குறைபாடும் சரியாகி விடும்.

இந்த பதிவை படித்து அதன் படி நடந்து நீங்கள் சிக்கலில் இருந்து வெளி வந்தவுடன் எனக்கு கட்டணம் கொடுக்க மறந்து விடாதீர்கள்.

உங்களுக்கு கட்டணம் கொடுக்க வேண்டும் என்று தோன்றினால் தெருவில் வயதானவர்கள் யாரையாவது பார்த்தால் ஒரு செட் ட்ரெஸ் ஒரு துண்டு. ஒரு வேளைக்கான உயர்தர சைவ உணவு வாங்கி வழங்குங்கள் அது எனக்கு வந்து சேர்ந்து விடும்.

Cause and Effect (Karma) ……

#கர்மவினை

கர்மா என்பது காரணம் வினை என்பது காரியம்.

உதாரணமாக ஆதார் அட்டை வாங்க அலுவலகம் செல்கிறீர்கள் அது கர்மா அதாவது ரீசன்.

அதற்கு படிவம் வாங்குதல் நிரப்புதல் அசிங்கமாக படம் பிடிக்க வரிசையில் நிற்பது போன்றவை காரியம் அதாவது வினை

அருகிலே ஒரு கடையில் வடை சுடும் வாசனை வருகிறது.

உங்களுக்கு லைனில் நிற்க போரடிக்கிறது. வடை மீது அலாதி பிரியம் வந்தும் விடுகிறது.

இப்போது லைனில் இருந்து வெளியே சென்று வடை திங்க வேண்டும். எனவே இந்த அலுவலகத்தில் காத்திருத்தல் உங்களுக்கு வேதனை அளிக்கிறது.

இந்த வேதனையை உங்களுக்கு பின் நிற்கும் ஒரு மடையன் கர்மவினை என்று பேரிட்டு உங்களுக்கு அதிகமாக வேதனையை ஏற்படுத்துகிறான். எனவே இது ஏதோ சாபம் போல தோன்றுகிறது . உடனே அவரிடம் கூறி விட்டு வடை கடைக்கு சென்று வர ஆசை படுகிறீர். போய் வந்து பார்த்தால் அந்த நபர் ஏற்கனவே முடித்து விட்டு வெளியே வந்து கொண்டே இருக்க நீங்கள் மீண்டும் லைனில் காத்திருக்கும் நிலை.

ஆதார் அட்டை வாங்கத்தான் வந்தீர்கள். வேறு வழியில்லை எப்படியாவது அதை வாங்கிதான் ஆக வேண்டும்.

அதே நேரத்தில் அதில் போர் அடிக்கலாம். இருந்த போதும் நீங்கள் வந்த நோக்கம் ஆதார் அட்டை வாங்கவே. அதை மறந்து விட்டு வேறு விசயத்திற்கு சென்றாலும் அதை வாங்குவதை தவிர்க்க முடியாது.

எனவே இதுதான் வந்த நோக்கம். அதிலிருந்து தப்பிக்க முயல்வது அறியாமை. உங்களுக்கு தப்பிக்க உதவுவதாக தன்னை முன்னிருத்துபவன் பைத்தியகாரன் அவனிடம் கவனமாக இருக்க வேண்டும். மீண்டும் வரிசையில் நிறுத்தி விட்டு போய்விடுவான

A strong Tea with Zodiac

புவி மற்றும் சூரிய மையம் இரண்டுமே சோதிடத்தை அழகுபடுத்திக் கொண்டுள்ளது.

ராசி என்பது புவி மைய அடிப்படையில் இருந்து பார்த்தால் நகரக்கூடியது ஆனால் எல்லை மாறாதது. பாவகம் என்பது நிலையானது ஆனால் தனது எல்லைகளை மாற்றிக் கொண்டே இருக்கும்.

இந்த எல்லை மாற்றங்கள் ராசியின் நகர்வால் மட்டுமே வருவதல்ல ராசிகளுக்குள் ஏற்படும் கிரக நிகழ்வால் நிகழ்வது.

ராசி மண்டல பலனில் ராசி நிலையானது அதன் எல்லையும் நிலையானது .
பாவக பலனில் ராசி சுழன்று கொண்டு பாவம் நிலையாக ஆனாலும் தனது எல்லைகளில் மாற்றங்களுடன் இருக்கும்.

அதை நம்மால் உணர முடியாது அப்போதும் கூட நாம் பாவகம் நகர்வது போலவே புரிந்து கொள்ள முடியும். ஆனால் பாவகம் எப்போதுமே நகராது.

லக்னம் எப்போதும் நகர்வதே இல்லை . ராசி சக்கரம் சுழல்கிறது. ஆனால் நாம் ராசி சக்கரத்தை வைத்து லக்னத்தை அளப்பதால் லக்னம் சுழல்வது போல புரிந்து கொள்கிறோம்.

வீட்டின் மின்விசிறியில் மேசை விசிறியில் மோட்டர் நிலையானது அதன் ஸாப்டில் இறக்கை இருக்கும். ரூஃபில் தொங்கும் மின்விசிறி மோட்டர் சுழலும் சாப்ட் ரூபில் நிலையாக முறுக்கப்பட்டிருக்கும்.

உடனை நாலு விஞ்ஞானிகள் கருத்து கூறலாம் காற்று வாங்க இதை தெரிய வேண்டுமா என்று. சோதிடம் என்பது எலெக்ரிசியன் போல இதுகூட தெரியாமல் தொழிலுக்கு வந்தது அரைகுறைத்தனம்

#ராஜநாடி

Coffee with Healer ……

நான் ஒரு வைத்தியரிடம் சில ஆண்டுகளுக்கு முன்பு பேசிக் கொண்டிருந்த போது அவரிடம் இருந்து ஒரு விசயம் கிடைத்தது. ஒரு நபர் அவரிடம் எனது தந்தைக்கு சக்கரை வியாதி உள்ளது அது எனக்கும் வருமா என்று கேட்டார். 
அந்த வைத்தியர் அது நீங்கள் பிறக்கும் போது உங்கள் தந்தை வயது அப்போது அவரது உடல் நிலை வைத்துதான் கூறமுடியும் என கூறினார். அவரிடம் விரிவாக கேட்டேன் பார்த்தி சாமி. எப்போதுமே நோய்கள் மரபனு வழியாக பயனிப்பது என்பது கருவில் உள்ள போது தாய் மற்றும் தந்தையின் உடல் நிலையில் இருந்தே வரும். தாய் தந்தை இணையும் போது அவர்கள் ஆரோக்கியமாக இருந்தால் அந்த குழந்தை நோய் தொற்றுகளுக்கு ஆளாவதில்லை. அந்த குழந்தை பிறந்த பிறகு அந்த தாய் தகப்பனுக்கு வரும் நோய்கள் குழந்தைக்கு வர வேண்டும் என்று அவசியம் இல்லை.

ஒரு வேளை கருவுறும் சமயத்தில் பெற்றோர்களுக்கு நோயின் தாக்கம் வெளியே தெரியாமல் ஆரம்ப நிலையில் இருந்தால் குழந்தையின் முதிர்ந்த காலத்தில் அந்த நோய் வரும்.

ஒரு மரத்தின் விதையை எடுத்து ஒட்டு போடும் போது அந்த விதை மகசூல் அளிப்பதற்கும் அந்த மரத்தில் ஒட்டு போட்ட மரம் மகசூல் அளிப்பதற்கும். முற்றிய மரத்தின் விதைக்கும். இளம் மரத்தின் விதைக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன.

ஒட்டு மரம் விரைவாக மகசூல் தரும் விரைவாகவே இறந்தும் போகும் அது தாக்கு பிடிக்க முடியாமல் தவித்து வரும். 
ஆனால் இளம் மரத்தின் விதை மூலம் உற்பத்தி ஆன மரம் நின்று நிதானமாக மகசூல் தரும் பல ஆண்டுகளாக அது வளர்ந்து வளமாக இருக்கும்.
இதுக்கும் சிலருக்கும் குழந்தை பாக்கியம். திருமணம் . கடன் போன்ற வற்றிற்கும் தொடர்பு உள்ளது.

ஒரு குழந்தை கருவுறும் தருவாயில் பெற்றோருக்கு குடும்ப வாழ்க்கை மீது வெறுப்பு மற்றும் விரக்தி அல்லது சிக்கல் இருக்குமானால் குழந்தை ஜாதகத்தில் அது பிரதிபலிக்கும். அந்த குழந்தையின் குடும்ப உறவுக்குள்ளும் சிக்கல் இருக்கும். சில குடும்பங்களில் தொடர்ச்சியாக திருமணம் தடை படுதல். திருமண வாழ்க்கை முறிவு ஏற்படுதல். தம்பதிகளில் ஒருவர் தவறிவிடுதல் என தொடர்ச்சியாக நடைபெறுவதை கவணிக்கலாம். இவை அனைத்தும் அந்த குழந்தை கருவாகும் போது குடும்பம் சிக்கலில் இருந்ததன் விளைவுதான் இதை ரிவர்ஸ் தியரியாக பேசினால் இந்த குழுந்தை இங்கு பிறக்க வேண்டும் என்று தீர்மானம் செய்ய படுவதே அந்த குடும்ப சூழல்தான்.

இந்த குடும்பம் சிக்கலில் உள்ளது என எவ்வாறு அறிவது. வெளிபடையாக சிக்கல் தெரியாமல் இருக்கலாம். ஆனால் பெற்றோர்களின் ஜாதகத்தில் சில அமைப்புகள் சில சமயங்களில் சிக்கலாக மாறிவிடும் அப்போது கருவான குழந்தை பெரும்பாலும் திருமண வாழ்க்கை சிக்கலில் மாட்டிக் கொள்ளும். 
இதை எவ்வாறு கண்டறிவது. எவ்வாறு தவிர்ப்பது. எப்படி சீர் செய்வது. இதை கொஞ்சம் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

வெற்று நம்பிக்கைகளை வைத்துக் கொண்டு இதை அனுக முடியாது.

சிம்பிளாக விதி என்று கூறிவிட்டு வாழ்ந்து விட்டு போகலாம்.

இன்னும் மூன்று மாதங்களுக்கு பின் வரும் ஒரு வருடம் கருவுறும் குழந்தைகள் ஜாதகம் இப்படித்தான் இருக்கும் இதை தவிர்க்க முடியாது .குறிப்பாக சில மாதங்களுக்கு இருக்கும். இது அடிக்கடி வந்து கொண்டே இருக்கும்

இதை எவ்வாறு சரி செய்வது. குடும்ப சூழலை சந்தோசமாக வைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் க்கு 1,5,9 ல் ராகு கேது இருந்தால். நிச்சயம் உங்கள் குழந்தைகளில் ஒருவருக்காவது இருக்கும்.

உங்கள் ஜாதகத்தில் கிரக வக்கிரம் இருந்தால் முக்கியமாக சனி உங்கள் குழந்தைகளில் ஒருவருக்காவது இருக்கும்.

இதை புரிந்து கொள்ள முடியாத சோதிடர்கள்தான் பித்ரு சாபம். குலதெய்வ சாபம் தோசம் என்று உளரிக் கொட்டுகிறார்கள்.

மேலும் உங்கள் ஜாதகம் மட்டுமே செயல்படுவதை குடும்பமானவுடன் நிறுத்திக் கொள்ளும் குழந்தை பிறந்தவுடன் அது மீண்டும் மாறுதலடையும்.

இன்னும் நெரய பேசுவோம் நேரம் கிடைக்கும் போது.

ஏனெனில் சோதிடம் அள்ள அள்ள வழங்கி கொண்டே இருக்கும்.

ஆனால் அதன் சுவையை ருசிக்க மொத்தத்தையும் பருக தேவையில்லை. ஒரு சொட்டு போதும் சோதிடம் சுவையானது என உணரலாம். தினமும் கொஞ்சம் கொஞ்சமாக சுவைக்கவும் செய்யலாம்

Image may contain: 1 person

Mars trine with North/ South Node . Thinking of Investing in Stock Market like things …. Read this before doing !!!!

Check your Natal (birth )chart

If Mars is in trine with North node (or) South node , do not invest in stock market. There might / will be Loss in Large amount

உங்கள் ஜாதகத்தை பாருங்கள்.

செவ்வாய்க்கு கோணத்தில் ராகு கேது இருந்தால் பங்கு சந்தையில் முதலீடு செய்ய வேண்டாம் பெரிய அளவில் இழப்பு ஏற்படும்.

Understanding of Zodiac System?

பலமுறை ஜோதிர்களுடன் உரையாடும் போது வானத்தை காட்டி இதில் ராசி மண்டலம் எங்கு உள்ளது என்று கேட்டால் அவர்கள் சடக்குனு ஷாக் ஆகி ஸ்லோமோசன்ல திரும்பி எனது முகத்தை பார்க்கிறார்கள். 

அது பரலோகத்தில் உள்ளது போல புரிந்து வைத்துள்ளனர். 

Image may contain: text

North Node or South Node Conjunct with Sun , Mars , Venus…. Attention pl !!!!

உங்கள் ஜாதகத்தை எடுத்துக் கொள்ளவும்.

அதில். 
சூரியன். 
சுக்கிரன். 
செவ்வாய்.

இந்த கிரகங்கள் மூன்றையும் தனிதனியாக கவனிக்கவும். எதாவது ஒன்று உள்ள வீட்டை ஒன்று என எண்ணத்துவங்கி 1,5,9 ல் ராகு அல்லது கேது இருந்தால்.

உங்கள் தொலைபேசி. டைரியில் என எங்கும் வழகுரைஞர் எண் ஊர் பெரிய மனிதர் எண். இருந்தால் நீக்கி விடுங்கள். பர்ஸில் உள்ள அவர்கள் விசிடிங் கார்டை வெளியே போட்டு விடுங்கள்.

ஏனெனில் ஆறப்போட்ட பிரச்னைகளில் 70% தானாகவே தீர்ந்து விடும். முக்கியமாக ஏற்கனவே குடும்பத்தை தொலைத்து விட்டு உங்களுக்கு பரிகாரம் கூறும் நபர்கள் என்னை முதலில் நீக்கவும். குறிப்பாக இவர்கள் உங்களை பிரித்து வைத்து விட்டு தான் தூங்குவார்கள்

உங்கள் மனம் உதவியை தேடும். தேடியவுடன் கிடைத்தால் தீர்வை தேடும்.

தீர்வுக்கு அருகே செல்லவதை விட உதவிக்கு காத்திருத்தல் பிரச்சினையின் வீரியத்தை குறைக்கும்.

குடும்பம் என்பது எடுத்தோம் கவுத்தோம்னு முடிக்க கூடிய விசயம் அல்ல.

ஏனென்றால் மேலே கூறிய அமைப்பு உங்கள் குடும்ப பிரச்னையை குறிப்பது. மூன்றாம் நபர் தலையீட்டுக்கு இடம் அளிக்க வாய்ப்பை குடுக்ககூடாது.

Image may contain: 1 person

Mars Conjunct with North / South Node…. Be Careful !!!!!

உங்கள் வீட்டில் பைனான்ஸ். மற்றும் நகை கடன் வழங்கும் நிதி நிறுவன நாட்காட்டி மற்றும் டைரிகள். வட்டி கடைக் காரர் போன் நம்பர் என்ற எது இருந்தாலும் அதை உடனடியாக அப்புறப்படுத்துங்கள் .

உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் உள்ள வீட்டில் இருந்து 1,5,9 ல் ராகு அல்லது கேது இருந்தால்.

நீங்கள் கடன் பெற வேண்டும் என்று முடிவெடுக்க அவைகள் உங்களை தூண்டிக் கொண்டே இருக்கும் . முடிந்தவரை அவைகளுக்கு வாய்பில்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த மீண்டும் கடன் பெறுபவர்கள் நீங்கள்தான் .