Insight On Jupiter and Venus

உள்வட்ட கிரகங்களில் அதிகபடியான காந்த அலை வரிசைகளை பிரதிபலிக்கும் பரப்பு கொண்ட கிரகம் சுக்கிரன். வெளிவட்டத்தில் குரு. ஆகையாலேயே இவை சுபாவ சுபர் என பெயர் வந்தது.

சூரியன் மற்றும் சந்திரன் அதிகபட்சமாக வெளிவிடுதல் மற்றும் பிரதிபலித்தலை செய்தாலும் அவை கிரகங்கள் இல்லை.

இந்த சுபர் அசுபர் என்பது நல்லது கெட்டது என்று குறிப்பிட அல்ல. தன் மேல் ஏற்பட்ட அதிர்வலைகளை அதிகபடியாக வெளிவிடுவதால்.

இதை நீங்கள் அதிகபட்சமாக வெளிவிடுதல் என்றவுடன் அதன் குணமாக புரிந்து கொள்ள வேண்டாம்.

நமது பூமியில் இருந்து பார்க்கும் போது அதன் பிரதிபலித்தலை அதிகமாக காணும்,அளவுக்கு தூரம் மற்றும் பரப்பு விகித வரிசை அடிப்படையில் சுக்கிரன் முதலிடம், குரு, இரண்டாமிடம்.

மேலும் குருவின் முழு பிரதிபலிப்பை முழுமையாக நாம் காண முடியும். ஏனெனில் அது வெளிவட்ட கிரகம். ஆனால் சுக்கிரனின் பாதி பிரதிபலிப்பு பகுதியை மட்டுமே நம்மால் காண முடியும்.


உதாரணமாக சந்திரனின் அஷ்மி நிலை எப்படியோ அதுபோல பாதி சுக்கிரனுக்கு மேல் நம்மால் காண முடியாது.

ஆகையாலேயே குரு,முழு சுபர். சுக்கிரன்,, முக்கால் சுபர்.ஆனால் உண்மையில் பலன் ரீதியாக அனைத்து கிரகங்களுமே சுபர்தான்

#ராஜநாடி

Image result for Jupiter & Venus in solar system

Explanation on Planetary Periods Calc..

தசா கோட்பாடு சந்திரனின் நகர்வை கொண்டு கணிக்கப்படுபவை. ராசி சக்கரத்தில் சந்திரன் ஒரு சுற்று வர 27.34 நாட்களை எடுத்துக் கொள்கிறது.

இந்த நகர்வு மற்றும் சூரியனுடன் உள்ள ஒற்றுமைகளை கொண்டு ராசி மண்டலம் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அதன் மூலம் பல விசயங்கள் அறியபடுகிறது.

இங்கு சந்திரன் மற்றும் சூரியன் ஆகிய இரண்டு பொருள்களை கொண்டு நாம் எதையும் உணரவில்லை. நாம இவைகளை கொண்டு உணர முயன்றது.

360° கொண்ட இந்த ராசி மண்டலத்தை பல அலகுகள் மூலம் தரம்பிரிக்க மட்டுமே. சோதிடத்தை நுனுக்கமாக அறிய சோதிட முறைகள் எடுத்துக் கொள்ளும் ஒரே உக்தி ராசிமண்டலத்தை முடிந்த அளவுக்கு அதிகமான பாகங்களாக பிரித்து அதன் மூலம் பலனறிவதே.

இந்த விசயம் சோதிடத்தை சரியான குருவிடம் கற்றவர்கள் அறிவர்.

ராசியை விட துல்லியம் நட்சத்திரம் அதைவிட துல்லியமாக பாதசாரம் இன்னும் பல பிரிவுகளாக பிரிக்க வர்க்க சக்கரம் பயன்படும். இந்த பிரிவுகள் கற்பனைகளாக இல்லாமல் வான் பொருட்களை சார்ந்து உருவாகியுள்ளது.

மேலும் சார சோதிட முறைகளும் கூட இந்த ராசி மண்டலத்தை அதிக படியாக கூறு போடவே முயன்றுள்ளனர். 360° ஐ நட்சத்திரம். உப நட்சத்திரம். உப உப என பிரிக்கபட்டது

ராசி மண்டலத்தைதான் பாவத்தை பிரிக்கவில்லை கிரகத்தை பிரிக்கவில்லை. பாவமும் கிரகமும் அடையாளம் கண்டு கொள்ள ராசி மண்டலம் அதிகபட்சமாக பிரிக்க முயன்றுள்ளனர்.

ஆனால் முன்பு உள்ளது போல சந்திரனின் 27,34 நாள் சுழற்சி அடிப்படையில் இருந்து மாறி தசா கணிப்பு அடிப்படையில் பிரிக்க முயன்று உள்ளனர் இது அடிப்படையில் அவ்வளவு சரியான கோட்பாடு இல்லை.

ஏனெனில் ராசி மற்றும் நட்சத்திர அதிபதிகள் அமைந்ததற்கு வலுவான அடிப்படை அடித்தளம் உள்ளது. அது ராசி மற்றும் நட்சத்திர மண்டலங்களில் உள்ள ஏற்றதாழ்வுகளை குறிக்கும் வார்த்தைகளுக்கு இனையாக அதிபதிகள் என பயன்படுத்தபட்டுள்ளது.

இதில் செவ்வாய் அதிபதி என்றால் செவ்வாய் கிரகம் அல்ல. அதன் பன்பு. ஆனால் சார சோதிடம் இவ்வாறு இல்லாமல் வேறு எதற்காகவோ உருவாக்கபட்ட ஒரு கணிதத்தை ராசி மற்றும் நட்சத்திர மண்டலத்தை பிரிக்க பயன்படுத்தி கொண்டுள்ளது

உதாரணமாக பெயிண்ட் டப்பாவை நாணயத்தை கொண்டு திறப்பது போல. ஏனெனில் நாணயம் பெயிண்ட் டப்பாவை திறக்க உருவானது இல்லை.

இந்த ராசி மண்டலம் ஒவ்வொரு பாகையிலும் வெவ்வேறு குணங்களை கொண்டது . அது அதிபதிகளால் பிரித்து உணர்த்தபடுகிறது. தசா. புத்தி. அந்த. சூக்கும நாதன்கள் வேறு ராசி மற்றும் நட்சத்திர மண்டலத்தில் உள்ள அதிபதிகள் வேறு.

உப. உப உப என ராசி மற்றும் நட்சத்திர மண்டலத்தை பிரித்து அதற்கு அதிபதிகள் பெயரிட்டு 360°யை அடையாளம் காட்டுவது அடிப்படை முரண்.

ஏனெனில் தசா கணிப்பில் சந்திரன் 360° சுற்ற 360 வருடங்கள் எடுத்துக் கொள்ளும் அளவு கோல் வேறு 27.34 நாள் எடுத்து கொள்ளும் அளவுகோல் வேறு.

ராசிமண்டலம் மற்றும் நட்சத்திரமண்டலம் பிரிவுகளாக்கி அதில் கிரக மற்றும் பாவத்தின் இருப்புகளை உணர 27.34 சந்திரன் நகரும் பாதையே சரியானது. 


ஏனெனில் அந்த பாதையில்தான் கிரகங்களும் பாவங்களும் நகன்று கொண்டுள்ளது. தசா வருடங்கள் உணர்த்தும் பாதை தடம் வேறு அதில் கிரக மற்றும் பாவ நகர்வுகள் இல்லை.

தசா அடிப்படைகளை கொண்டு ஒரு மனிதனின் என்னத்தை அறியலாம். ஏனெனில் என்னம் போல்தானே வாழ்க்கை . ஆனாலும் என்னமே வாழ்க்கை என்று ஏற்றுக் கொள்ளவும் முடியாதுதானே.

உண்மையில் பண்டைய நூல்களில் கூறும் விதி மதி கதி என்பது லக்னம் சந்திரன் சூரியன் என்ற மூன்றை குறிப்பதா அல்லது அது ஒரு மண்டல பாதை மாற்றங்களை குறிப்பதா தொடர்ந்து பேசலாம். ஏனெனில் சோதிடம் பெரிய பொக்கிசம்.

என்னிடம் லத்தின் இலக்கிய நூல் உள்ளது அது சூட்சுமங்கள் நிறைந்தது என நான் கூறுகிறேன் என்றால் எனக்கு அந்த நூலை படிக்க தெரியவில்லை என்று பொருள்.

அந்த மொழி தெரிந்தவன் அதை கட கட என புரட்டி படித்து புத்தகத்தில் உள்ளதை புரிந்து கொண்டு விளக்கம் அளிப்பான்.

எனக்கு லத்தின் மொழி தெரியாத காரணத்தால் என் கையில் உள்ள புத்தகம் எனக்கு கடைசிவரை சூட்சமம்தான் .

உங்கள் அன்பு ஜோதிடன் ஜோதிட பயிற்சியாளர். சுய முன்னேற்ற பேச்சாளர் கா பா

Image may contain: one or more people, people standing and outdoor

https://www.facebook.com/parthi.bang.96/posts/2495372990690827

Skin Diseases

உங்கள் ஜாதகத்தை எடுத்துக் கொள்ளவும்.

அதில் புதன் உள்ள இடத்தில் விரலை வைத்து ஒன்று என துவங்கி வரிசையாக அடுத்தடுத்த வீடுகளை எண்ணுங்கள் 1, 5, 9ல் ராகு இருந்தால் வெட்டுகாயங்கள் வெடிப்புகள் தழும்புகள். தோல் உரிதல் தவிர்க்க முடியாதவை. கேது இருந்தால் கொப்புளம். கட்டிகள் படர்தாமரை நமைச்சல் தவிர்க்க முடியாதவை .

இவை இரவில்தான் அதிகமாக வேலையை காட்டும்.

இதை மாற்றவே முடியாது ஆனால் பாதிப்பு அதிகமாக வராமல் தடுக்கலாம் .

நான் கூறும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சோப்பு மற்றும் குளியல் பொடியை வாங்கி பயன்படுத்துங்கள். ஏனெனில் புதன் உள்ளூரை குறிப்பது. இயற்க்கையாக சுதேசிகளால் செய்த குளியல் பொடி சோப்பை பயன்படுத்தி தடுக்கலாம். இதற்கு செவ்வாய் மருந்து சரியாக இருக்கும் சிவப்பு நிறத்தில் பூ வரும் செடியின் தைலங்களை பயன்படுத்தலாம் செம்பருத்தாதி தைலம் உபயோகிக்கலாம்.

மருத்துவம் தொடர்பான சோதிட ஆலோசனைகளுக்கு எனது பதிவை தொடருங்கள். அரசு அங்கீகாரம் பெற்ற மருந்து தயாரிப்பாளர்கள் முகவரி தருகிறேன். போலியாக கூகுளில் படித்து மருந்து தயாரிப்பவர்களை புறக்கனியுங்கள். ஏனெனில் நீங்கள் உங்கள் உடலை பனையமாக வைத்து சோதனை செய்யக் கூடாது.

கா பா.